Venkat prabhu: விஜய்யுடன் கோட் படத்தில் இணைந்து நடிக்கும் வெங்கட் பிரபு.. என்ன கேரக்டர் தெரியுமா?

நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் தற்போது மாஸ்கோவில் நடந்து வருகிறது. அங்கு தொடர்ந்து இரு வாரங்கள் படத்தின் சூட்டிங் நடத்தப்படவுள்ள நிலையில், ஒட்டுமொத்த சூட்டிங்கையும் நிறைவு செய்துவிட்டு படக்குழுவினர் நாடு திரும்பவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. வரும் 19ம் தேதி தமிழகத்தில் நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக விஜய் நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக கேரளா, சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ளது. கேரளாவில் தொடர்ந்து ஆறு நாட்கள் இந்த படத்தின் ஷூட்டிங் நடந்த சூழலில் ஆறு நாட்களும் நடிகர் விஜய்யை கேரள ரசிகர்கள் கொண்டாடியதை பார்க்க முடிந்தது. சர்வதேச தேச அளவில் விஜய் எப்போதுமே மாஸ் தான் என்பதை இதன் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளார்.

Director Venkat prabhu seems to act with Actor Vijaj in The greatest of all time movie

நடிகர் விஜய்: நடிகர் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் நடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் தற்போது மாஸ்கோவில் நடந்து வருகிறது. இந்த சூட்டிங்கில் பங்கேற்பதற்காக சில தினங்களுக்கு முன்பு துபாய் வழியாக விஜய் மாஸ்கோ புறப்பட்டு சென்றதை பார்க்க முடிந்தது. இந்த படத்தின் சூட்டிங் மாஸ்கோவில் தொடர்ந்து இரு வாரங்கள் நடத்தப்பட்டு ஒட்டுமொத்த சூட்டிங்கும் முடிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. வரும் 19ம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில் அதற்கு முன்னதாகவே இந்த படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கையும் நிறைவு செய்துவிட்டு விஜய் நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநர் வெங்கட் பிரபு: இந்தப் படத்தை இயக்கி வரும் இயக்குனர் வெங்கட் பிரபு நடிகரும் கூட. பல படங்களில் இவர் ஹீரோவாகவும் கேரக்டர் ரோல்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் கோட் படத்திலும் விஜய்யுடன் இணைந்து இவர் நடித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் சிஎஸ்கே ஃபேனாக வெங்கட் பிரபு நடித்துள்ளதாகவும் சமீபத்தில் கேரளாவில் எடுக்கப்பட்ட ஷூட்டிங்கில் வெங்கட் பிரபுவின் காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இது மட்டுமில்லாமல் படத்தில் முன்னணி நடிகர் ஒருவரும் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விஜய்யுடன் நடித்துள்ள வெங்கட்பிரபு: தொடர்ந்து அடுத்தடுத்து விஜய்யின் GOAT படத்தின் அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் வரும் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் சென்னையில் பாடல் காட்சியுடன் துவங்கியது. இதில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா உள்ளிட்டவர்களும் ஆட்டம் போட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் பாடல் வரும் 14ம் தேதி ரிலீசாகுமா அல்லது விஜய் இந்தப் படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் அந்தப் பாடல் வெளியாகுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்: படத்தில் யுவன் சங்கர் ராஜா நீண்ட காலங்களுக்கு பிறகு விஜய் படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தில் 4 பாடல்கள் மற்றும் பிஜிஎம் என களைகட்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. எப்போதுமே விஜய் படங்களின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரசிகர்களை வெகுவாக கவரும்வகையில் வெளியாகும். அந்தவகையில் இந்தப் பாடலும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X