Venkat prabhu: பாலிவுட் போகும் இயக்குநர் வெங்கட் பிரபு.. ஹீரோ யாரு தெரியுமா?

சென்னை: நடிகர், இயக்குநர் என பல்வேறு தளங்களில் தன்னை கோலிவுட்டில் வெளிப்படுத்தி வருகிறார் வெங்கட் பிரபு. அந்த வகையில் அவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான கோட் படத்தில் விஜய் அதிரடி சரவெடியாக நடித்திருந்தார். அப்பா மற்றும் மகன் என இருவேறு கேரக்டர்களில் விஜய் நடித்திருந்தனர்.

நீண்ட காலங்களுக்கு பிறகு நெகட்டிவ் ஷேடில் விஜய்யை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டிய நிலையில் படம் மிகப்பெரிய வசூலை பெற்றுள்ளது. இந்நிலையில் வெங்கட் பிரபுவின் அடுத்த படம் குறித்து அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. விரைவில் இந்த தகவல்களுக்கு வெங்கட் பிரபு தரப்பில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

vijay venkat prabhu goat movie

இயக்குநர் வெங்கட் பிரபு: சென்னையை 28 உள்ளிட்ட படங்கள்மூலம் இயக்குநராக தன்னை சிறப்பாக வெளிப்படுத்திக் கொண்ட வெங்கட் பிரபு, தொடர்ந்து அடுத்தடுத்த அதிரடிகளை கொடுத்து வருகிறார். இவரது படங்களில் பார்ட்டி கொண்டாட்டங்கள் இருப்பது மிகச் சிறப்பாக பார்க்கப்படுகிறது. தன்னுடைய படங்களில் ரசிகர்களுக்கான கொண்டாட்டங்களை அடுத்தடுத்து வைப்பது இவரது பாணியாக இருக்கிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் விஜய்யுடன் வெங்கட் பிரபு கூட்டணி அமைத்து வெளியான கோட் படம் மிகப்பெரிய கொண்டாட்டத்தை ரசிகர்களுக்கு கொடுத்தது.

விஜய்யின் கோட் படம்: இந்த படத்தில் அப்பா மற்றும் மகன் என இருவேறு கேரக்டர்களில் விஜய் நடித்திருந்தார். மகன் கேரக்டரில் நெகட்டிவ் ஷேடில் விஜய் நடித்திருந்த போதிலும் ரசிகர்களை அந்த கேரக்டரும் கவரவே செய்தது. மேலும் படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா, பிரேம்ஜி, வைபவ், அரவிந்த் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளத்தை இணைத்து வேலை வாங்கி இருந்தார் வெங்கட் பிரபு. இது போதாது என்று திரிஷா, சிவகார்த்திகேயன் உடன் தானும் இந்த கோட் கொண்டாட்டத்தில் இணைந்து கொண்டார். படத்தில் ரசிகர்கள் கொண்டாட அதிகமான விஷயங்கள் காணப்பட்டன.

வெங்கட் பிரபு நெக்ஸ்ட்?: இந்நிலையில் சில கலவையான விமர்சனங்களை கோட் படம் பெற்ற போதிலும் இந்த ஆண்டின் மிகச் சிறப்பான வசூல் படமாக மாஸ் காட்டியுள்ளது. விஜய் தற்போது தன்னுடைய கடைசி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவரது கடைசிக்கு முந்திய படமாக வெளியான கோட் படத்திற்கும் மிகப்பெரிய வரவேற்பும் எதிர்பார்ப்பும் காணப்பட்ட நிலையில் சில விமர்சனங்களை தவிர்த்து படம் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளானது. இந்நிலையில் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள படம் குறித்து பல்வேறு தகவல்கள் இணையதளங்களில் வெளியாகி வருகின்றன.

பாலிவுட் போகும் வெங்கட் பிரபு?: வெங்கட் பிரபு அடுத்ததாக பாலிவுட்டில் படம் இயக்க உள்ளதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தின் பேச்சு வார்த்தைகள் நிறைவடைந்துள்ளதாகவும் இந்த படத்தில் நடிகர் அக்ஷய்குமார் ஹீரோவாக நடிக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளன. இந்த தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். முன்னதாக அஜித்துடன் வெங்கட் பிரபு இணையவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், சத்யஜோதி பிலிம்சிற்காக அவர் படம் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது அவரது பாலிவுட் என்ட்ரி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இந்த தகவல்களுக்கு வெங்கட் பிரபு தரப்பில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X