விஜய் சினிமாவை விட்டு விலக நான் தான் காரணமா? வெங்கட் பிரபு விளக்கம்!
சென்னை: நடிகர் விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படம் செப்டம்பர் 5ந் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் வெங்கட் பிரபு படம் குறித்து பல விஷயத்தை பேசி உள்ளார்.
.ஜி.எஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி உள்ள திரைப்படம், 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'. இதில், பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், ஜெயராம், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி, வைபவ், யோகிபாபு என பல திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

வெங்கட் பிரபு: நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய வெங்கட் பிரபுவிடம், விஜய் இதற்கு முந்தைய படத்தில், கட்சிக்கொடி, மோதிரம் போன்றவை இடம் பெற்று இருக்கும் இந்த படத்திலும் அதுபோல எதாவது காட்சி வந்து இருக்கா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த வெங்கட் பிரபு, இந்த படத்தில் அது போல எந்த காட்சியும் இல்லை. படத்தில் எந்த இடத்திலும் அரசியல் பேச வேண்டும், மக்களுக்கு இது செய்வேன் என்று எந்த இடத்திலும், எதையும் அவர் சொல்லவே இல்லை. அவர் படத்தை படமாகத்தான் பார்க்கிறார். இதே கேள்வியைத்தான் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாக கேட்கிறார்கள் என்றார்.
இனிமே குடிக்கவே மாட்டேன்: அதைத்தொடர்ந்து, மற்றொரு செய்தியாளர், டிரைலரில் இனிமே குடிக்கவே கூடாது என்று மங்காத்தா படத்தில் அஜித் பேசும் வசனம் வருகிறதே. இது அஜித் ரசிகர்களை திருப்தி படுத்துவதற்காக வைத்த வசனமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அவர், இது வெங்கட் பிரபுவோட டையலாக், அந்த வசனத்தை அஜித்தை நான் தான் பேச வைத்தேன், இதில் விஜய்யை பேச வைத்து இருக்கிறேன் என்றார்.
நான் தான் காரணமா: மற்றொரு செய்தியாளர், கோட் படத்தில் விஜய் நடிக்கும் போது தான், சினிமாவை விட்டு விலகி அரசியலில் ஈடுபடப்போவதாக சொல்லி இருக்கிறார். அப்போது, அதற்கு காரணம் நீங்க தானா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த வெங்கட் பிரபு, என்ன கொடுமை சார் இதெல்லாம் என்று சொல்லி விட்டு, விஜய்யின் ரசிகன் என்கிற முறையில், என் சினிமாவில் தொடர்ந்து நடிக்கலாமே என்று கேட்டேன். அதற்கு அவர், அடவிடு அப்புறம் பார்க்கலாம் என்றார். மற்றபடி, அரசியல் குறித்து பேசியதே இல்லை என்றார்.


Click it and Unblock the Notifications











