Custody :மாஸ் வேணுமா மாஸ் உந்தி.. தில் ராஜூவை கலாய்த்த வெங்கட் பிரபு!
ஐதராபாத் : நடிகர் நாக சைத்தன்யா, கிரீத்தி ஷெட்டி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் கஸ்டடி. தமிழ் மற்றும் தெலுங்கில் வரும் 12ம் தேதி திரையரங்குகளில் இந்தப் படம் ரிலீசாகவுள்ளது.
இந்தப் படத்தின்மூலம் முதல்முறையாக தமிழில் நாக சைத்தன்யா மற்றும் கிரீத்தி ஷெட்டி அறிமுகமாகின்றனர். இதேபோல தெலுங்கில் வெங்கட் பிரபு இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்.
ஆக்ஷன் த்ரில்லராக இந்தப் படம் உருவாகியுள்ள நிலையில், படத்தை வித்தியாசமான ஜானரில் எடுத்துள்ளதாக வெங்கட்பிரபு சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய வெங்கட் பிரபு: நடிகர் நாக சைத்தன்யா, கிரீத்தி ஷெட்டி ஆகியோர் தமிழில் அறிமுகமாகும் படம் கஸ்டடி. வெங்கட்பிரபு இயக்கியுள்ள இந்தப் படம் வரும் மே 12ம் தேதி தமிழ், தெலுங்கில் ரிலீசாகிறது. இந்தப் படத்தின் மூலம் தெலுங்கில் வெங்கட்பிரபு இயக்குநராக களமிறங்குகிறார். இந்தப் படம் அவருக்கு மாநாடு படத்தை போலவே சிறப்பாக கைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சிகளில் சென்னையிலும் ஐதராபாத்திலும் படக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டனர்.
இடையில் பல பிரமோஷன் நிகழ்ச்சிகளிலும் நாக சைத்தன்யா, வெங்கட் பிரபு, கிரீத்தி ஷெட்டி உள்ளிட்டவர்களும் ஈடுபட்டனர். படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ரிலீசாகவுள்ள நிலையில், சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் படத்தின் பிரமோஷன்கள் நடத்தப்பட்டன. தன்னுடைய சொந்த வாழ்க்கை குறித்தும் நாக சைத்தன்யா பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார். சமந்தாவுடன் தன்னுடைய விவாகரத்து குறித்தும் அவர் முதல் முறையாக மனம் திறந்துள்ளார்.
இவை அனைத்தும் படத்திற்கான சிறப்பான பிரமோஷன்களாக அமைந்துள்ளன. இந்தப் படத்தின் நாயகி கிரீத்தி ஷெட்டியும் முதல் முறையாக தமிழில் அறிமுகமாகவுள்ளது படத்திற்காக சிறப்பாக பார்க்கப்படுகிறது. எப்போதும் காமெடி ட்ராக்கையே தன்னுடைய படங்களில் அதிகமாக பயன்படுத்துபவர் வெங்கட் பிரபு. அவர் மாநாடு படத்தில் சற்றே விலகி, டைம் லூப் அடிப்படையிலான படத்தை எடுத்தார். இந்தப் படம் அவருக்கும் படத்தின் நாயகன் சிம்புவுக்கும் சிறப்பாக கைக்கொடுத்தது.
இந்நிலையில் கஸ்டடி படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் மோடிலேயே இருக்கும் என்று வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தன்னுடைய இயக்கத்திலேயே அதிகமான பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் கஸ்டடி என்றும் அவர் கூறியுள்ளார். தன்னுடைய படத்தில் ஜாலியை எதிர்பார்த்து வருபவர்களுக்கு இந்தப் படம் புதுவித அனுபவமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். தன்னுடைய படத்தில் தன்னுடைய படத்தில் இளையராஜாவின் பெயர் இடம்பெற வேண்டும் என்ற தன்னுடைய நீண்டநாள் ஆசை இந்தப் படத்தில் நிறைவேறியுள்ளதாகவும் யுவனும் சிறப்பாக இசையமைத்துள்ளதாகவும் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஐதராபாத்தில் நடைபெற்ற பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய வெங்கட் பிரபு, முன்னதாக தயாரிப்பாளர் தில் ராஜூ, வாரிசு படத்தின் ரிலீஸ் சமயத்தில் பேசி ட்ரெண்டாக்கியதை போல, ஸ்டைல் வேணுமா ஸ்டைல் உந்தி, ஆக்ஷன் வேணுமா ஆக்ஷன் உந்தி, பர்பார்மென்ஸ் வேணுமா பர்பார்மென்ஸ் உந்தி, பேமிலி சென்டிமெண்ட் வேணுமா பேமிலி செண்டிமெண்ட் உந்தி, இந்தப் படத்துல என்ன வேணுமா எல்லாம் உந்தி, மாஸ் வேணுமா மாஸ் உந்தி என்று தெரிவித்தார்.
இதைக் கேட்டு அரங்கமே கைத்தட்டி ஆர்ப்பரித்தது. இந்த பேச்சைக் கேட்ட நடிகர் நாக சைத்தன்யாவும் மிகவும் உற்சாகமாக கைத்தட்டி சிரித்தார். நடிகை கிரீத்தி சுரேஷும்வெங்கட் பிரபுவின் இந்தப் பேச்சை கேட்டு ஆர்ப்பரித்தார். இந்தப் படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிகவும் அதிகமாக காணப்படுகிறது. இந்தப் படத்தின் மூலம் தெலுங்கிலும் கால்பதிக்கும் வெங்கட்பிரபுவிற்கு இந்தப் படம் சிறப்பாக கைக்கொடுக்கும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications











