Venkat prabhu: பிறந்தநாளில் ப்ரெண்ட்ஸோட பார்ட்டி பண்ணாம வெங்கட் பிரபு செஞ்ச வேலையை பாருங்க!
சென்னை: நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகத் திறமையுடன் கோலிவுட்டில் வலம்வரும் ஒரு சிலரில் நடிகர் வெங்கட் பிரபுவும் ஒருவர். அடுத்தடுத்து மாஸான கூட்டணியில் இவர் படங்களை இயக்கி வருகிறார். சென்னை 28 படத்தில் துவங்கிய இவரது இயக்குநர் பயணம் சமீபத்தில் விஜய்யின் கோட் படத்துடன் நிலைபெற்றுள்ள்ளது.
அடுத்ததாக ரஜினிகாந்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்றைய நேற்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளையொட்டி வாழ்த்துக்களை பகிர்ந்த அனைவருக்கும் வெங்கட்பிரபு தன்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இயக்குநர் வெங்கட் பிரபு: நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என அடுத்தடுத்த கட்டங்களில் தன்னை வெளிப்படுத்தி வருகிறார் வெங்கட் பிரபு. முன்னதாக ஹீரோவாகவும் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாகவும் சில படங்களில் நடித்திருந்த வெங்கட் பிரபு, சென்னை 28 படம் மூலம் தன்னை இயக்குநராக வெளிப்படுத்திக் கொண்டார். நடிப்பு அவருக்கு சரியாக கை கொடுக்காத நிலையில் இயக்கம் அவரை உச்சத்தில் கொண்டு சேர்த்தது. முதல் படமான சென்னை 28 படமே அதிரிபுதிரி வெற்றி. அடுத்தடுத்து கோவா, சரோஜா என படங்களை பார்ட்டி கொண்டாட்டத்தின் அடிப்படையில் இயக்கி வெற்றியையும் சாத்தியப்படுத்தினார்.
வெங்கட்பிரபுவின் மங்காத்தா படம்: இதையடுத்து நடந்தது தான் கோலிவுட்டின் மாஸான நிகழ்வு. அஜித்தை மங்காத்தா படத்தில் இயக்கினார் வெங்கட் பிரபு. இந்த படத்தின் வெற்றி மற்றும் கதைக்களம் தற்போது வரை பேசப்பட்டு வருகிறது. அஜித்தின் கேரியர் பெஸ்ட் படங்களில் மங்காத்தாவும் ஒன்று. இந்த படத்தில் நெகட்டிவ் ஷேடில் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார் அஜித். அவருக்கு அது மிக இயல்பாக வந்தது. அதை சிறப்பாக பயன்படுத்தினார் வெங்கட் பிரபு. இந்த படத்தைப் போல அடுத்தடுத்த படங்களை அவர் கொடுப்பார் என்று தொடர்ந்து ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். ஆனால் அடுத்தடுத்த படங்களில் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்ட வெங்கட் பிரபு மன்மத லீலை உள்ளிட்ட படங்களையும் இயக்கினார்.
விஜய்யுடன் கோட் படம்: இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் விஜய்யுடன் கூட்டணி அமைத்து கோட் படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து மிகச்சிறப்பான வசூலை பெற்றுக் கொடுத்துள்ளது. கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் விஜய்யின் பெஸ்ட் படங்களில் ஒன்றாகவே அமைந்தது. அப்பா மற்றும் மகன் என இருவேறு கேரக்டர்களில் விஜய் இந்த படத்தில் மாஸ் காட்டியிருந்தார். நீண்ட காலங்களுக்கு பிறகு இந்த படத்தில் விஜய் வில்லனாக தன்னை வெளிப்படுத்தினார். இந்நிலையில் வெங்கட் பிரபுவிற்கு இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
பிறந்தநாளில் கோயில் விசிட்: அவர் அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்தை இயக்க உள்ளதாகவும் கோலிவுட்டில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் நேற்றைய தினம் அவர் தனது 49வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இதையொட்டி அவருக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்திருந்தனர். இந்நிலையில் தனக்கு வாழ்த்துக்களை சொன்ன அனைவருக்கும் வெங்கட் பிரபு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் பிறந்த நாளில் தான் சுவாமிமலை கோயிலுக்கு சஷ்டியையொட்டி நண்பர்களுடன் சென்றதை அவர் குறிப்பிட்டுள்ளார். வெங்கட் பிரபு என்றாலே பார்ட்டி தான். அவரையும் அவரது கேங்கையும் சிறப்பாக வழி நடத்துவது பார்ட்டி கொண்டாட்டங்கள் தான்.
நல்ல பிள்ளையாக மாறிய வெங்கட்பிரபு: வெங்கட் பிரபு படங்கள் அனைத்திலும் அவரது கேங் இடம்பெறும். சூட்டிங் ஸ்பாட்டை அவர்கள் பார்ட்டிக்கான களங்களாக மாற்றி விடுவார்கள். இந்நிலையில் கோட் படத்திலும் வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் என வெங்கட் பிரபுவின் கேங் இணைந்து நடித்திருந்தனர். அவர்களுடன் இணைந்து விஜய்யும் வைப் செய்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் முன்னதாக வெளியாகியிருந்தன. இந்நிலையில் பிறந்த நாளும் அதுவுமாக நல்ல பிள்ளையாக தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து பார்ட்டிக்கு செல்லாமல் கோயிலுக்கு சென்றதாக வெங்கட் பிரபு கூறியது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











