சிம்பு ரசிகர்களுக்கு நன்றி சொன்ன பிரபல இயக்குநர்... எதுக்குன்னு பாருங்க!
சென்னை : நடிகர் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு படம் சூப்பர் டூப்பர் வெற்றியை பெற்றுள்ளது.
Recommended Video
இந்தப் படம் தற்போது 100 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
டைம் லூப்பை அடிப்படையாக கொண்ட மாநாடு படத்தின் சிறப்பான திரைக்கதை படத்தை ரசிகர்கள் கொண்டாட காரணமாக அமைந்தது.

மாநாடு படம்
நடிகர் சிம்பு, எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் மாநாடு. இந்தப் படம் டைம் லூப்பை அடிப்படையாக கொண்டு வெளியானது. தமிழில் இது புது முயற்சியாக பார்க்கப்பட்டது.

சிறப்பான திரைக்கதை
கரணம் தப்பினால் மரணம் என்பது போல, மீண்டும் மீண்டும் ஒரே நிகழ்வை காட்டும்போது ரசிகர்கள் சில நேரங்களில் சலிப்படைய நேரும். ஆனால் தனது சிறப்பான திரைக்கதையின்மூலம் இந்தக் குறை ரசிகர்களுக்கு தெரியாதவண்ணம் படத்தை கொடுத்திருந்தார் இயக்குநர் வெங்கட் பிரபு.

100 நாட்களை தாண்டிய மாநாடு
படம் கொடுத்த இந்த சிறப்பான அனுபவத்தையடுத்து படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தற்போது இந்தப் படம் 100 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடி வருகிறது. மேலும் நாக சைத்தன்யா லீட் ரோலில் நடிக்க படம் தெலுங்கிலும் ரீமேக்காக உள்ளது. படத்தை வெங்கட் பிரபுவே இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வெங்கட்பிரபு நன்றி
இந்நிலையில் படம் 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடி வருவதற்கு அதன் இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் சிம்பு ரசிகர்கள் மற்றும் சினிமா லவ்வர்களுக்கு கோடானு கோடி நன்றி தெரிவித்துள்ளார். பிரிண்ட் மற்றும் ஆன்லைன் மீடியா நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இந்த வெற்றியை சாத்தியப்படுத்திய அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

மன்மத லீலை படம்
வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படம் அதிரி புதிரி வெற்றியடைந்துள்ள நிலையில் அடுத்ததாக அவரது இயக்கத்தில் மன்மத லீலை படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. வரும் ஏப்ரல் 1ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் கிளிம்ப்ஸ் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications











