மாநாடு இரண்டு ஆண்டு நிறைவு.. வாழ்க்கையில் மறக்க முடியாத படம்.. வெங்கட் பிரபு நெகிழ்ச்சி!
சென்னை: மாநாடு திரைப்படம் வெளியாகி இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதை அடுத்து இயக்குநர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2021ஆம் அண்டு வெளியானத் திரைப்படம் மாநாடு.

இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே சூர்யா, எஸ்ஏ சந்திர சேகர், ஒய் ஜி மகேந்திரன், பிரேம்ஜி என பலர் நடித்திருந்தனர்.
மாநாடு: கோலிவுட் சினிமாவின் ஜாலியான இயக்குநர் என வெங்கட் பிரபு இயக்கியத் திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் சிலம்பரசன் ஹீரோவாக நடித்திருந்தார். ஒரு மாநாடு, அங்கு நடக்கவிருக்கும் அசம்பாவிதம், அதை தடுக்க நினைக்கும் இளைஞனுக்கு அந்த நாள் மட்டுமே நாள் கணக்காக ரிபீட் ஆகிறது.
டைம் லுப் கதை: ஹாலிவுட்டில் இதுபோன்ற எத்தனையே திரைப்படங்கள் வந்திருந்தாலும், தமிழக்கு இந்த டைம் லுப் கதைக்களம் புதுசு என்பதால், இந்த படத்தை கொண்டாடினார்கள். ஒரே காட்சி பல முறை வந்தாலும், அந்த காட்சி சலிப்பை ஏற்படுத்தாமல் கதையை அழகாக கொண்டு சென்று இருப்பார் வெங்கட் பிரபு.
தலைவரே தலைவரே: அப்துல் காலீக் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த சிம்புவிற்கு இத்திரைப்படம் ஒரு கம்பேக் திரைப்படமாக அமைந்து அடுத்த திரைப்படங்களில் மாஸ் காட்டி வருகிறார். இப்படத்தில் வில்லனாக நடித்திருந்த எஸ்ஜே.சூர்யா தலைவரே தலைவரே என்ற வசனத்தை பேசி கைத்தட்டலை அள்ளினார்.
என்னால் மறக்க முடியாத படம்: இந்நிலையில், மாநாடு படம் வெளியாகி இன்றோடு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, மாநாடு படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு எக்ஸ் தள பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மாநாடு திரைப்படத்தை உருவாக்கியது சிறப்பான அனுபவமாக இருந்தது. வாழ்நாள் முழுவதும் அப்படத்தை என்னால் மறக்க முடியாது என பதிவிட்டுள்ளார்.
சுரேஷ் காமாட்சி: அதே போல மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி,ஒரு பெரும் பயத்திற்கும் தன்னம்பிக்கைக்கும் நடுவே பயணித்த தருணம். தன்னம்பிக்கை கொஞ்சம் தூக்கலாகச் செல்ல வெல்ல முடிந்தது. அதுவொரு வெல்ல வெற்றிதான். இனிப்பானது. மாநாடு படத்தின் அனுபவத்தைத் தான் சிலாகிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











