Venkat prabhu: தளபதி 68 அறிவிப்பு சும்மா தெறிக்கும்.. ட்வீட்டில் மாஸ் கிளப்பிய வெங்கட்பிரபு!
சென்னை: நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். படம் வரும் அக்டோபர் 19ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் இணையவுள்ளார் விஜய். இதுகுறித்த அறிவிப்பு முன்னதாக வெளியானது.

இதனிடையே படத்தின் பூஜை, சூட்டிங் குறித்த அறிவிப்பிற்காக ரசிகர்கள் மரண மாஸ் வெயிட்டிங். தற்போது வெளிநாட்டில் சுற்றுலாவில் உள்ள விஜய் நாடு திரும்பியதும் இந்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தளபதி68 குறித்து பேசிய வெங்கட் பிரபு: நடிகர் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம் மேனன், மிஷ்கின், ப்ரியா ஆனந்த் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் லியோ. மாஸ்டர் படத்தை தொடர்ந்து இந்தப் படத்தில் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதத்தில் காஷ்மீரில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில், தொடர்ந்து கடுமையான பனி, நிலநடுக்கம் உள்ளிட்டவற்றிற்கு மத்தியில 52 நாட்கள் நடைபெற்றது.
தொடர்ந்து சென்னை, தலக்கோணம் ஆகிய இடங்களிலும் இந்தப் படத்தின் சூட்டிங் தொடர்ந்து நடத்தப்பட்டு, கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிறைவு பெற்றுள்ளது. தற்போது படத்தின் டப்பிங் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் அக்டோபர் 19ம் தேதி படத்தின் ரிலீஸ் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதையொட்டி பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
இந்நிலையில் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்திற்காக இணையவுள்ளார் நடிகர் விஜய். இந்தப் படத்தின் அறிவிப்பு மேற்கொள்ளப்பட்ட நிலையில், கடந்த சில மாதங்களாக படத்தின் டிஸ்கஷனுக்காக வெங்கட் பிரபு தன்னுடைய குழுவினருடன் கோவாவில் முகாமிட்டிருந்தார். இதனிடையே தற்போது லியோ படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளதால், ஆகஸ்ட் மாதத்திலேயே தளபதி 68 படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.
இதனிடையே நேற்றைய தினம் அடுத்தது என்ன நாளை காலை 11 மணிவரை காத்திருங்கள் என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருந்தார். இதனால், தளபதி 68 படம் குறித்த அறிவிப்பைதான் அவர் வெளியிடப் போகிறார் என்று விஜய் ரசிகர்கள் தளபதி 68 ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கினார்கள். ஆனால் இன்று 11 மணிக்கு அவர் விஜய் ரசிகர்களை கடுப்பேற்றினார். நண்பர்கள் தினமான இன்று தன்னுடைய தயாரிப்பில் உருவாகவுள்ள நண்பன் ஒருவன் வந்த பிறகு என்ற படத்தின் அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
ஹிப்ஹாப் தமிழா ஆதியின் உதவி இயக்குநர் ஆனந்த் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். படத்தை எழுதி இயக்கி நடிக்கவும் செய்துள்ளார். இந்தப் படத்தின் அறிவிப்பை தான் வெங்கட்பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். இந்நிலையில் விஜய் ரசிகர்களுக்கும் அவர் ஆறுதல் தரும் விதமாக அடுத்த போஸ்ட்டை வெளியிட்டுள்ளார். தளபதி68 அறிவிப்பு சும்மா தெறிக்கும், காத்திருங்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.



Click it and Unblock the Notifications











