Director Venkat prabhu: நடந்துடுச்சா.. GOAT பட சூட்டிங் ஸ்பாட்டில் வைபவ்வுடன் வெங்கட் பிரபு ஜாலி உரையாடல்!

சென்னை: நடிகர் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு தற்போது விஜய்யின் The greatest of all time படத்தை இயக்கி வருகிறார். நடிகர் விஜய், மீனாட்சி சவுத்ரி, பிரபு தேவா, பிரஷாந்த், அஜ்மல் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டாகளில் நடித்துவரும் இந்தப் படத்தை டைம் டிராவல் ஜானரில் வெங்கட் பிரபு இயக்கிவருகிறார். படத்தில் அப்பா மற்றும் மகன் என இருவேறு கெட்டப்புகளில் நடித்து வருகிறார் விஜய். படத்தின் சூட்டிங் வரும் மார்ச் இறுதி அல்லது ஏப்ரலில் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படம் ஆகஸ்ட் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதையொட்டி அடுத்தடுத்த கட்ட சூட்டிங்குகளை நடத்தி வருகிறார் வெங்கட்பிரபு.

சென்னையையொட்டிய பகுதிகளில் இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது நடந்து வருகிறது. இந்தப் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் அடுத்தடுத்து ரசிகர்களையும் விஜய் சந்தித்து வருகிறார். இதன் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. படத்தின் அடுததடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. படத்தில் நடிகர்கள் ஏராளமானோர் உள்ள நிலையில், இவர்களை எப்படி படத்தில் வெங்கட் பிரபு பயன்படுத்தியுள்ளார் என்பதை தெரிந்துக் கொள்ள தற்போதே ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவரது படங்கள் எப்போதுமே கலாட்டாவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Director Venkat prabhu & Vaibhav joined released the video about Ranam movie

நடிகர் விஜய்: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் The greatest of all time படத்தை இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு. முன்னதாக சரோஜா, மங்காத்தா, சென்னை 28 உள்ளிட்ட படங்களை இயக்கி மாஸ் காட்டியுள்ளார் வெங்கட் பிரபு. அஜித்தை மாறுபட்ட கோணத்தில் காட்டிய மங்காத்தா படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து அடுத்தடுத்த படங்களை கொடுத்து வரும் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்திருந்த மாநாடு படம் கடந்த சில மாங்களுக்கு முன்பு வெளியாகி மாஸ் காட்டியது. டைம் லூப் அடிப்படையில் வெளியான இந்தப் படம் சூப்பர் ஹிட்டடித்து சிம்பு கேரியர் பெஸ்ட்டாக அமைந்தது.

வெங்கட் பிரபு கேங்: வெங்கட் பிரபுவின் கேங் ஒன்று உள்ளது. அவர் இயக்கும் அனைத்து படங்களிலும் இந்த கேங்கிற்கு கண்டிப்பாக இடம் இருக்கும். இந்த கேங்கில் அவரது தம்பி பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்டவர்கள் உள்ளனர். இதில் வைபவ், வெங்கட் பிரபுவின் சரோஜா படத்தின்மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர். தொடர்ந்து அவரது இயக்கத்திலேயே கோவா, மங்காத்தா, பிரியாணி, சென்னை 600028 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மற்ற இயக்குநர்களின் படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். தொடர்ந்து ஹீரோவாகவும் நடித்து வரும் வைபவ் நடிப்பில் தற்போது ரணம் படம் வெளியாகியுள்ளது.

வைபவ்வின் 25வது படம்: இந்தப் படம் வைபவ்வின் 25வது படமாக அமைந்துள்ளது. இதுகுறித்து தற்போது அவரை தமிழில் அறிமுகப்படுத்திய வெங்கட் பிரபு. தான் இயக்கிவரும் விஜய்யின் GOAT படப்பிடிப்பு தளத்திலிருந்து ஜாலியான ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். வைபவ்வுடன் இணைந்து அவர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். வாழ்க்கையில் சில விஷயங்கள் எப்படி நடந்தது என்று யோசிக்க வைக்கும் என்றும் அதுபோன்றதுதான் வைபவ் 25 படங்களில் நடித்துள்ளார் என்பதும் என்று குறிப்பிட்டுள்ளார். தான் அறிமுகப்படுத்திய ஹீரோ 25 படங்களில் நடித்துள்ளார் என்பது தன்னை அதிக வயதானவனாக உணர வைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Director Venkat prabhu & Vaibhav joined released the video about Ranam movie

வெங்கட்பிரபு -வைபவ் ஜாலி வீடியோ: தமிழ் சினிமாவில் நான்கைந்து படங்களில் நடிப்பதே கஷ்டமான விஷயம் என்ற நிலையில், தான் அறிமுகப்படுத்திய நடிகர் 25 படங்களில் நடித்துள்ளது பெருமையாக உள்ளதாகவும் அவ் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து வீடியோவில் என்ட்ரி கொடுத்த வைபவ், தன்னை அறிமுகப்படுத்திய வெங்கட் பிரபுவை கௌரவப்படுத்தும் நோக்கத்தில் தினந்தோறும் சூட்டிங்கில் பங்கேற்று தான் இதை சாதித்ததாக காமெடியாக குறிப்பிட்டார். தொடாந்து பேசிய வெங்கட்பிரபு, தான் காலையில் இருந்து பார்ப்பதாகவும் நன்றாக இருப்பதாக விமர்சனங்கள் வருவதாகவும் இது எப்படி சாத்தியம் என்றும் கலாய்க்கிறார்.

வைபவ்வை கலாய்த்த வெங்கட் பிரபு: தொடர்ந்து திரில்லர் படமாக ரணம் உருவாகியுள்ளதாகவும் வெங்கட் பிரபு இந்தப் படத்தை பார்த்தால் இடைவேளைக்கு கூட சீட்டில் இருந்து எழுந்திருக்க மாட்டார் என்றும் வைபவ் கூறுகிறார். ஏன் டீ நன்றாக இருக்காது என்று எழுந்திருக்க மாட்டேனா என்று வெங்கட்பிரபு தொடர்ந்து கலாய்க்கிறார். இந்த காமெடிகளை தவிர்த்துவிட்டு தொடர்ந்து சீரியசாக பேசும் வெங்கட்பிரபு, காலையில் இருந்தே படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வருவதாகவும் தானும் படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளதாகவும் வீடியோவை முடிக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X