Actor Premgi: பிரேம்ஜிக்கு நாளை திருத்தணி கோயிலில் திருமணம்.. ஏற்பாடுகளை பார்வையிட்ட வெங்கட் பிரபு!
திருத்தணி: நடிகர், இசையமைப்பாளர் பிரேம்ஜி 40 வயதை கடந்த நிலையிலும் திருமணம் செய்யாமல் எஸ்கேப் ஆகி வந்த சூழலில் இந்து என்ற பெண்ணுடன் அவருக்கு நாளைய தினம் திருமணம் நடக்க உள்ளது. திருத்தணி முருகன் கோயிலில் மிகவும் எளிமையாக இந்த திருமணம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ சிறப்பாக நடக்க உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இயக்குனரும் பிரேம்ஜியின் அண்ணனுமான வெங்கட் பிரபு அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் இன்றைய தினம் திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த இயக்குநர் வெங்கட்பிரபு பிரேம்ஜியின் திருமண ஏற்பாடுகளை பார்வையிட்டார். இதன் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. தற்போது கோட் படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங்கை எடுத்துவரும் இவர் திருமணத்தையொட்டி இடைவெளி எடுத்துக் கொண்டுள்ளதாக தெரிகிறது.

நடிகர் பிரேம்ஜி: நடிகர் பிரேம்ஜி இயக்குநர் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரனின் இளைய மகன் மற்றும் இயக்குனர் -நடிகர் வெங்கட் பிரபுவின் தம்பி. இவர் தொடர்ந்து நடிகர், இசையமைப்பாளர் என அடுத்தடுத்த தளங்களில் பயணித்து வருகிறார். பெரும்பாலும் தன்னுடைய அண்ணன் வெங்கட் பிரபுவின் இயக்கத்திலேயே இவரை அதிகமாக காண முடிகிறது. 40 வயதை கடந்த நிலையிலும் தொடர்ந்து பேச்சிலராகவே ஊர் சுற்றி வந்த பிரேம்ஜிக்கு நாளைய தினம் திருத்தணி கோயிலில் மிகவும் எளிமையாக திருமணம் நடத்த அவரது குடும்பத்தினர் திட்டமிட்டு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரேம்ஜி -இந்து திருமணம்: இந்து என்ற பெண்ணை பிரேம்ஜி நாளைய தினம் திருமணம் செய்ய உள்ளார். இந்த திருமணம் காதல் திருமணம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்து மீடியாவை சேர்ந்தவர் இல்லை என்றும் கோயிலில் உறவினர்கள், நண்பர்கள் சூழ நாளைய தினம் நடக்க உள்ள திருமணத்தை அடுத்து விரைவில் இவர்களது வரவேற்பு நிகழ்ச்சி நடக்க உள்ளதாகவும் இயக்குனர் வெங்கட் பிரபு முன்னதாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் தங்களது பிரைவசியை மதித்து ரசிகர்கள், தங்கள் இருக்கும் இடத்திலிருந்து மணமக்களை வாழ்த்த வேண்டும் என்றும் வரவேற்பில் சந்திக்கலாம் என்றும் அவர் கூறியிருந்தார்.
திருத்தணியில் திருமணம்: இந்நிலையில் நாளைய தினம் திருத்தணி கோயிலில் நடக்கவுள்ள பிரேம்ஜி மற்றும் இந்து திருமணத்தின் முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை இயக்குனர் வெங்கட் பிரபு இன்றைய தினம் நேரில் சென்று பார்வையிட்டார். முன்னதாக கோயிலில் சாமி தரிசனம் செய்த வெங்கட் பிரபு, பிரகாரத்தையும் சுற்றி வந்து, கோயில் நிர்வாகிகளிடம் திருமண முன்னேற்பாடுகள் குறித்து விவாதித்தார். முன்னதாக இந்த திருமணத்திற்காக எளிய முறையில் அச்சடிக்கப்பட்டிருந்த திருமண அழைப்பிதழும் சமூக வலைதளங்களில் வெளியாகி அனைத்து தரப்பினரையும் கவர்ந்திருந்தது. இந்த பத்திரிகையில் பிரேம்ஜியின் பெரியப்பா இளையராஜாவின் பெயர் காணப்படவில்லை.
இளையராஜா பங்கேற்பாரா?: நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே பங்கேற்கவுள்ள பிரேம்ஜியின் திருமணத்தில் இளையராஜா பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் பிரேம்ஜியின் திருமணத்தையொட்டி குடும்பத்தினர் அனைவரும் கொண்டாட்டத்தில் உள்ளதாக கங்கை அமரனின் சகோதரர் மறைந்த பாஸ்கரின் மகள் வாசுகி பாஸ்கர் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். முன்னதாக பவதாரணி உள்ளிட்டவர்களுடன் இணைந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் அவர் தனது பதிவில் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











