Bhavatharini: பவதாரிணி பிறந்த நாள்.. மனம் உருகிய வெங்கட் பிரபு.. அந்த புகைப்படம் தான்!

சென்னை: இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி. இவர் கடந்த ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி, உடல்நலக் குறைவால் காலமானார். இலங்கையில் சிகிச்சையில் இருந்த பவதாரிணி உடல்நலக் குறைவால் காலமானார். இதனால் அவரது உடல் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டது. அவர் மறைந்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிறது. இன்று பவதாரிணியின் பிறந்த நாள் என்பதால், அவரது சித்தப்பா மகனும் அண்ணனும் ஆன வெங்கட் பிரபு, தனது எக்ஸ் பக்கத்தில் பவதாரிணி புகைப்படத்தை பகிர்ந்து தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.

பவதாரிணி உடல் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர், அவர்களின் சொந்த ஊரான பண்ணைபுரத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. மேலும் அவரது உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னர், வெங்கட் பிரபு, கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, பிரேம் ஜி உள்ளிட்ட பலரும் பவதாரிணியின் உடலைச் சுற்றிலும் நின்று மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலை, கண்ணீரோடு பாடி பவதாரிணிக்கு இறுதி மரியாதை செலுத்தினர். மேலும் அவரது உடல் அவரது தாயார் நினைவிடத்திற்கு அருகில் புதைக்கப்பட்டது.

Venkat Prabhu Bhavatharini Birthday Bhavatharini

பவதாரிணி மறைந்த பின்னர், அவரது குரலை ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டு, விஜய்யின் கோட் படத்தில், சின்னச் சின்ன கண்கள் என்ற பாடலை, உருவாக்கினர். இந்தப் பாடலை விஜய்யும் பாடினார். மேலும், இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அண்மையில் இளையராஜா அளித்த பேட்டியில் கூட, தனது குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட முடியாமல் போனதாக தெரிவித்தபோது, நான் எனது குழந்தைகளுடன் நேரம் செலவிடாத காரணத்தால்தான், சமூகத்திற்கு இவ்வளவு பாடல்களைக் கொடுக்க முடிந்தது என்றார். தனது மகள் இறந்த போது, தனது எக்ஸ் பக்கத்தில் அன்பு மகளே என பதிவிட்டிருந்தார். பவதாரிணி மறைவு இசை ரசிகர்கள் அனைவருக்கும் பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

பவதாரிணி : பவதாரிணிக்கு புற்றுநோய் இருப்பது மிகவும் கடைசி நிலையில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. அதே நேரத்தில் பவதாரிணிக்கு புற்றுநோய் என அவருக்கு இறுதி வரை தெரியாமல் பார்த்துக் கொண்டனர். இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சைக்காக சென்றபோதுதான் சிகிச்சை பலனின்றி இறந்தார். பவதாரிணி குரலில், வெளியான பாடல்களில், மயில் போல பொண்ணு ஒன்னு, என் வீட்டு ஜன்னல் வழி, ஒளியிலே தெரிவது உள்ளிட்ட பாடல்கள் பெரும் வெற்றிப் பாடல்களாகவும், ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த பாடல்களாகவும் உள்ளன.

Venkat Prabhu Bhavatharini Birthday Bhavatharini

வெங்கட் பிரபு: இப்படியான நிலையில், பவதாரணி மறைவுக்குப் பின்னர் அவரது இரண்டாவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இப்படியான நிலையில், பவதாரணியின் புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து, தனது வருத்தத்தையும் பதிவு செய்துள்ளார். ஏற்கனவே கடந்த ஆண்டு தான் பகிர்ந்த புகைப்படத்தின் பதிவை மீண்டும் அவரே ரீ ஷேர் செய்துள்ளார். அதில், ஒரு ஆண்டு முடிந்து விட்டது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தங்கச்சி என பதிவிட்டுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் பலரும் வெங்கட் பிரபுவுக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X