தளபதி 68.. விறுவிறுப்பாக நடந்து வரும் படப்பிடிப்பு.. மாஸ் அப்டேட்!
சென்னை: தளபதி 68 திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.
பான் இந்திய திரைப்படமாக வெளியாக உள்ள லியோ படத்தை ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இத்திரைப்படம் ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு வரும் 19ந் தேதி திரையரங்கில் வெளியாகி உள்ளதால்,படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.
தளபதி 68: லியோ படத்தின் ஹைப்பே இன்னும் தனியாத நிலையில், தளபதி 68 திரைப்படம் குறித்த அறிவிப்பும் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள இந்த படத்தின் பூஜை நடந்து முடிந்துள்ளது.
இயக்குநர் வெங்கட்பிரபு: இப்படத்தின் மூலம் முதல்முறையாக இயக்குநர் வெங்கட் பிரபு விஜய்யுடன் இணைகிறார். இதனால் ரசிகர்களின் 13 ஆண்டு கால ஏக்கம் நிறைவடைந்துள்ளது. தளபதி 68 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.இதில்,ஜெய், அபர்ணா தாஸ், பிரபுதேவா, வைபவ், லைலா, மீனாட்சி சௌத்ரி, பிரசாத், மைக் மோகன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.
வில்லனாக மைக்மோகன்: பல வருடமாக திரையில் தென்படாமல் இருந்த மைக் மோகன் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. வில்லன் கேரக்டரில் நடிக்க அரவிந்த் சாமியிடம் பேச்சுவார்த்தை நட்ந்த நிலையில், அவரிடம் கால்ஷீட் கிடைக்காததால், அவருக்கு பதிலாக மைக் மோகன் நடிக்க இருக்கிறார். அப்பா,மகன் என இரண்டு வேடத்தில் விஜய் நடிக்க இருக்கும் நிலையில், விஜய்யின் இளவயது நண்பர்களாக பிரபுதேவா மற்றும் பிரசாந்த் நடிக்க உள்ளனர்.
மாஸ் அப்டேட்: இந்நிலையில் விறுவிறுப்பாக நடந்து வரும் தளபதி 68 படத்தில் விஜய், பிரபு தேவா மற்றும் பிரஷாந்த் ஆகிய மூவரும் இடம்பெறும் பாடல் De-Aging தொழில்நுட்பத்தை கொண்டு எடிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பாடலில் இளம் வயது விஜய், தனது இரு நண்பர்களுடன் இணைந்து பாடும் பாடலாக இருக்கலாம் நம்பப்படுகிறது.
சண்டை காட்சி: படத்தில் பாடல் முடிவடைந்த நிலையில், தற்போது தளபதி 68 படக்குழு தென்னாபிரிக்கா நாட்டுக்கு சென்றுள்ளது என்றும், அங்கு ஒரு சண்டை காட்சி படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் தளபதி 68 படத்தின் டைட்டில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











