மத்தவங்க சொல்ற மாதிரியெல்லாம் அவர் இல்ல.. நடிகர் சிம்புவை புகழ்ந்து தள்ளிய வெங்கட் பிரபு!

சென்னை: நடிகர் சிம்பு மற்றவர்கள் சொல்வதை போல் இல்லை என இயக்குநர் வெங்கட் பிரபு புகழ்ந்து தள்ளியுள்ளார்.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் மாநாடு. இந்தப் படத்தில் நடிகர் சிம்பு நடித்து வருகிறார்.

சிம்பு நடிப்பில் கடைசியாக கடந்த ஆண்டு வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற படம் ரிலீஸ் ஆனது. இதனை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு மாநாடு படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

சிறு வயதிலிருந்தே தெரியும்

சிறு வயதிலிருந்தே தெரியும்

சிம்புவின் ஒத்துழைப்பு இல்லாததால் படப்பிடிப்பு தாமதமாக காரணம் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு ஒரு நேர்காணலில் எஸ்.டி.ஆருடன் பணிபுரிவது பற்றி பேசியுள்ளார். அதாவது தனக்கு சிறுவயதிலிருந்தே எஸ்.டி.ஆரை தெரியும் என்றும் தனக்கு அவர் மிகவும் நெருக்கமானவர் என்றும் ஒரு குடும்பத்தைப் போலவே இருப்பதாகவும் கூறினார்.

மதுரை பகுதியில் விற்க

மதுரை பகுதியில் விற்க

தனது படமான சென்னை 28ல் சிம்புவின் பங்களிப்பு குறித்து பேசிய வெங்கட் பிரபு, சிம்புதான் சரோஜா சமான்னிகாலோ பாடலை படத்தின் க்ளைமாக்ஸில் வைக்க பரிந்துரைத்ததை நினைவு கூர்ந்தார். மேலும் இந்த படத்தை மதுரை பகுதியில் விற்க அவர் உதவியதாகவும் வெங்கட் பிரபு கூறினார்.

எந்த பிரச்சனையும் இல்லை

எந்த பிரச்சனையும் இல்லை

மேலும் நீண்ட நாட்களாக சிம்புவுடன் இணைந்து பணியாற்ற விரும்பியதாகவும் ஆனால் அது மாநாடு படத்தில்தான் நடந்திருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
மேலும் சிம்பு பற்றி பலர் பலவாறு பேசுகின்றனர். ஆனால் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பில் அவரால் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் அவர் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமைகளில்..

ஞாயிற்றுக்கிழமைகளில்..

ஞாயிற்றுக்கிழமைகளிலும் இரவிலும் சிம்பு படப்பிடிப்புக்கு வரமாட்டார் என்று சிலர் தன்னிடம் கூறியதாக தெரிவித்த வெங்கட் பிரபு அதில் கொஞ்சமும் உண்மையில்லை, ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் மறுநாள் வரை ஹைதராபாத்தில் ஷுஙட்டிங் நடத்தப்பட்டது என்றும் வெங்கட் பிரபு கூறினார்.

முழு ஒத்துழைப்பு

முழு ஒத்துழைப்பு

இதில் எந்த தயக்கமும் இல்லாமல், எதுவும் சொல்லாமல் நடிகர் சிம்பு பங்கேற்றதாகவும் அவர் கூறினார். வெங்கட் பிரபு முழுக்க முழுக்க நடிகர் சிம்புவை பாராட்டியே பேசியுள்ளார். சிம்பு குறித்து வெளியில் பேசப்படுவதை கேட்கும் போது ஆச்சரியமாக உள்ளது. அவர் சரியான நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வருவதோடு முழு ஒத்துழைப்பையும் தருகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X