எம்ஜிஆரின் மடியில் உட்கார்ந்து கொண்டிருக்கும் சிறுவன்.. இப்பொழுது தமிழ் சினிமாவில் பிரபலம்!
சென்னை : மிகப் பெரிய இசைக் குடும்பத்தில் இருந்து வந்து இப்பொழுது இயக்குனராக கலக்கி கொண்டுள்ளவர் இயக்குனர் வெங்கட் பிரபு
ஹீரோவாக பல படங்களில் நடித்து வந்த இவர் சென்னை 28 என்ற படத்தை இயக்கி இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்
மாநாடு கொடுத்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து இப்பொழுது மன்மதலீலை என்ற படத்தை இயக்கி வரும் வெங்கட்பிரபு மக்கள் திலகம் எம்ஜிஆரின் மடியில் உட்கார்ந்து கொண்டு உள்ள அரிய புகைப்படம் இணையதளத்தில் திடீரென வலம் வருகிறது.

சென்னை 28
இயக்குனர், இசைமைப்பாளர், எழுத்தாளர்,பாடகர் என பல பரிமாணங்களை கொண்டுள்ள கங்கை அமரனின் மூத்த மகன் வெங்கட்பிரபு. இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ளார். பல படங்களில் ஹீரோவாக நடித்து வந்த வெங்கட் பிரபு சென்னை 28 என்ற கலக்கலான வெற்றி படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.

டைம் லூப்பில்
நாம் அன்றாடம் கடந்து செல்லும் காட்சிகளை வைத்து வெங்கட்பிரபு இயக்கி இருந்த சென்னை28 திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து சரோஜா, கோவா, மங்காத்தா,பிரியாணி, மாஸ் என்கிற மாசிலாமணி , சென்னை 28 பாகம் 2 என தொடர் வெற்றி படங்களை கொடுத்த வெங்கட்பிரபு கடைசியாக மாநாடு என்ற படத்தை இயக்கியிருந்தார் சிம்புவின் அட்டகாசமான நடிப்பில் வெளிவந்த மாநாடு மாபெரும் வெற்றி பெற்றதோடு வசூலையும் அள்ளியது. அதுவரை காமெடி படங்களை இயக்கிக் கொண்டிருந்த வெங்கட்பிரபு முதல் முறையாக சீரியஸான ஒரு சப்ஜெக்டை எடுத்து டைம் லூப்பில் இயக்கி இருந்தது மிகவும் வித்தியாசமாக இருந்தது.

கலர்ஃபுல்லாக உருவாகியுள்ள பார்டி
பெரும் போராட்டத்திற்கு பிறகு திரையரங்குகளில் வெளியான மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் வெங்கட்பிரபு அடுத்ததாக மன்மதலீலை என்ற படத்தை இயக்கி வருகிறார். அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனத்தை பெற்றது. மன்மதலீலை படத்தின் படப்பிடிப்பு பணிகள் அதிரி புதிரியாக நடைபெற்று வருகிறது மேலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் கலர்ஃபுல்லாக உருவாகியுள்ள பார்டி திரைப்படம் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

எம்ஜிஆரின் மடியில்
இவ்வாறு தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக கலக்கிக் கொண்டிருக்கும் வெங்கட் பிரபு மக்கள் திலகம் எம் ஜி ஆரின் மடியில் உட்கார்ந்தவாறு உள்ள சிறு வயது அரிய புகைப்படம் இப்பொழுது இணைய தளத்தில் திடீரென வைரலாகிறது. அதில் மக்கள் திலகம் எம்ஜிஆர் முதலமைச்சராக இருக்கும் காஸ்ட்யூமில் இளையராஜாவுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது எம்ஜிஆரின் மடியில் சிறு வயது பையனாக வெங்கட் பிரபு உட்கார்ந்து உள்ளார். இதுவரை பலரும் பார்த்திராத இந்த புகைப்படம் இப்போது இணையதளத்தில் வைரலாகிறது


Click it and Unblock the Notifications











