அஜித் படம் பார்த்துவிட்டு ட்ரீட் கொடுத்த விஜய்.. 9 வருடங்களுக்கு பிறகு மனம் திறந்த இயக்குநர்!

சென்னை: அஜித்தின் மங்காத்தா படத்தை பார்த்துவிட்டு பிரபல நடிகரான விஜய் இயக்குநர் வெங்கட்பிரபுவுக்கு ட்ரீட் கொடுத்த தகவல் தீயாய் பரவி வருகிறது.

Recommended Video

1990 TO 2020 THALAPATHY HIT MOVIES | ASHWIN ANALYSE |THALAPATHY BIRTHDAY SPECIAL |FILMIBEAT TAMIL

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரங்களாக ஜொலிப்பவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய்.

இவர்களுக்கு இடையே நல்ல நட்பு இருந்து வரும் நிலையிலும் இவரது ரசிகர்கள் எலியும் பூனையும் போல சமூக வலைதளங்களில் சண்டை போட்டு வருகின்றனர்.

மங்காத்தா படம்

மங்காத்தா படம்

இந்நிலையில் நடிகர் விஜய் குறித்த சுவாரசிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது 2011ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கிய 'மங்காத்தா' படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிகர் அஜித்தை சந்தித்தார் என்பது அவர்களின் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் தெரியும்.

பிரியாணி

பிரியாணி

அப்போது நடிகர் விஜய் அஜித்துக்கு ஒரு அட்டகாசமான வாட்சை வழங்கியிருந்தார். அஜித் நடிகர் விஜய்க்கும் அவரது குடும்பத்தினருக்கும் தனது கையாலேயே பிரியாணி சமைத்து பரிமாறினார். இந்த விஷயங்கள் எல்லாம் பல ஆண்டுகளாக தெரிந்திருந்தாலும் அதனை தொடர்ந்து நடைபெற்ற ஒரு சுவாரசிய சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.

பெரிய ட்ரீட்

பெரிய ட்ரீட்

அதாவது மங்காத்தா படம் வெளியான பிறகு நடிகர் விஜய் படத்தை பார்த்ததாகவும், படம் ரொம்பவே நல்லா இருப்பதாக பாராட்டியதாகவும் இயக்குநர் வெங்கட்பிரபு 9 ஆண்டுகளுக்குப் பிறகு தெரிவித்துள்ளார். மேலும் மங்கத்தா படத்தை தொடர்ந்து விஜய் தன்னை வீட்டிற்கு டின்னருக்கு அழைத்து பெரிய ட்ரீட் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இம்ப்ரஸ் செய்ய

இம்ப்ரஸ் செய்ய

மேலும் தாங்கள் பல விஷயங்களைப் பற்றி விவாதித்ததாகவும், கதை ரெடியானதும் தன்னிடம் சொல்லுமாறு விஜய் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் ஒரு நல்ல கதையுடன் அவரை இம்ப்ரஸ் செய்ய காத்திருப்பதாகவும் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளர்.

சிவகாசி படத்தில்

சிவகாசி படத்தில்

மேலும் வித்தியாசமான கதையுடன் விரைவில் அவருடன் படம் பண்ணுவேன் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். இயக்குநர் வெங்கட் பிரபு ஏற்கனவே நடிகர் அஜித்துடன் கிரீடம் படத்தில் நடித்துள்ளார். அதேபோல் விஜயுடன் சிவகாசி படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X