எங்கள் குலதெய்வத்தை இழந்து நிற்கிறோம்.. திக்கித் திணறிக்கொண்டு இருக்கிறோம்.. வெங்கட் பிரபு உருக்கம்!

சென்னை: தனது தாயார் மறைவு குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு உருக்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரரான கங்கை அமரன், நடிகர், இயக்குனர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பல முகங்களை கொண்டவர்.

இவரது மூத்த மகன் வெங்கட் பிரபு இயக்குனராகவும் இளையமகன் பிரேம்ஜி நடிகராகவும் உள்ளனர்.

கங்கை அமரினின் மனைவி

கங்கை அமரினின் மனைவி

இந்நிலையில் கங்கை அமரனின் மனைவியும் பிரேம்ஜி மற்றும் வெங்கட் பிரபுவின் தாயாருமான மணிமேகலை கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு உடல் நலக்குறைவால் காலமானார்.

வெங்கட் பிரபு உருக்கம்

69 வயதான மணிமேகலையின் மறைவுக்கு திரைத்துறை நட்சத்திரங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் தனது தாயார் மறைவு குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு உருக்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது,

குலதெய்வத்தை இழந்து

குலதெய்வத்தை இழந்து

எனது தந்தை திரு கங்கை அமரன் அவர்களும் எனது தம்பி பிரேம்ஜியும் நானும் என் குடும்பமும் எங்கள் குடும்பத்தின் குல தெய்வத்தை இழந்து நிற்கிறோம். முன்னொருபோதும் பார்த்திராத இப்படிப்பட்ட பேரிடர் காலத்தில் ஒரு பேரிழப்பில் திக்கித் திணறிக்கொண்டு இருக்கிறோம்.

சிரம்தாழ்ந்த நன்றி

சிரம்தாழ்ந்த நன்றி

இந்த நிலையில் எங்களை அரவணைத்து தேற்றித் தோள்கொடுத்து நிற்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் என் குடும்பத்தின் சார்பாக என் ஆத்மார்த்தமான நன்றிகளை சிரம்தாழ்ந்த வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் தொலைபேசி வாயிலாகவும் மற்றும் சமூக வலைதளங்கள் வழியாகவும் எங்கள் மீது நீங்கள் அனைவரும் பொழிந்து வரும் பிரதிபலனில்லா அன்பில் நெகிழ்ந்துபோய் இருக்கிறோம்.

கடமைப்பட்டு இருக்கிறோம்

கடமைப்பட்டு இருக்கிறோம்

காவேரி மருத்துவமனையின் மருத்துவர்கள், மருத்துவக் குழுவினர் மற்றும் எங்கள் குடும்ப நண்பர் டாக்டர் திரு தீபக் சுப்ரிமணியம் அனைவரது அர்ப்பணிப்பு மிக்க சேவைக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள். உடன் பணிபுரியும் சக தோழர்கள், நண்பர்கள் சக திடிரைப்பட, ஊடக சகோதர சகோதரியர், ரசிகர்கள் அனைவரது அஞ்சலிக்கும் பிரார்த்தனைகளுக்கும் நாங்கள் கடமைப்பட்டு இருக்கிறோம்.

Recommended Video

Venkat Prabhu அம்மா Manimegalai காலமானார் | Gangai Amaran, Premji Amaran
வாழ்நாள் முழுவதும்

வாழ்நாள் முழுவதும்

தம் வாழ்வின் மிக முக்கிய தருணத்தின் அலுவல்களுக்கிடையிலும் என் அன்னையின் நிறைவு நாட்களிலும் ஆத்மசாந்திக்கான வழிமுறைகளிலும் எங்களோடு இமயம் போல் நின்று வலுவூட்டித் தேவைப்பட்ட அத்தனை உதவிகளையும் தக்க நேரத்தில் செய்து தந்தை என் நண்பர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டிருக்கிறேன். இவ்வாறு வெங்கட் பிரபு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X