ஏய் எப்புட்றா? இரண்டு ஆஸ்கர் விருதை வென்ற பயில்வான் ரங்கநாதன்.. குழம்பிய ரசிகர்கள்!

சென்னை : இரண்டு ஆஸ்கர் விருதை வென்ற பயில்வான் ரங்கநாதன் என்று இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளதால், ரசிகர்கள் குழப்பமடைந்தனர்.

சிம்புக்கு கம்பேக் கொடுத்த திரைப்படமாக அமைந்த மாநாடு படத்தின் வெற்றிக்கு பின் வெங்கட் பிரபு கஸ்டடி படத்தை இயக்கி உள்ளார்.

இதில் தெலுங்கு நடிகர் நாகசைதன்யா நாயகனாக நடித்து வருகிறார்.

வெங்கட்பிரபு : மங்காத்தா, மாநாடு போன்ற பிளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் வெங்கட் பிரபுக்கு என்று தனி ரசிகர் கூட்டும் உண்டு. மாநாடு படத்தில் டைம் லூப் என்ற வித்தியாசமான கதையை கொடுத்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருந்தார். வெங்கட்பிரபு தற்போது தெலுங்கில் இயக்குனராக களமிறங்கி கஸ்டடி என்ற படத்தை இயக்கி வருகிறார்.

கஸ்டடி திரைப்படம் : தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியில் வெளியாக உள்ள இப்படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இப்படத்திற்கு இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்து உள்ளனர். அவர்கள் சேர்ந்து இசையமைத்த டைம்லெஸ் லவ் என்கிற காதல் பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

director venkat prabhu tweet about bailwan ranganathan

மே 12ந் தேதி ரிலீஸ் : கஸ்டடி படத்தின் டீசருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து, நாக சைத்தன்யாவை தமிழ் படத்தில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இத்திரைப்படம் மே மாதம் 12ஆம் தேதி தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் வெளியாக உள்ளது. க்ரித்தி ஷெட்டி, சரத் குமார், பிரியாமணி, ரவி பிரகாஷ் எனப் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

director venkat prabhu tweet about bailwan ranganathan

இசை வெல்லம் பயில்வான் ரெங்கநாதன் : இந்நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற இசையமைப்பாளர் இசை வெல்லம் பயில்வான் ரெங்கநாதன் சாரின் பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்காக மனமார்ந்த வாழ்த்துக்கள். எங்களுக்கு செம்ம பெருமையான தருணம். உங்கள் பணியின் மிகப்பெரிய ரசிகன் சார். மேலும் விபரங்களுக்கு நாளை மாலை 5 மணிக்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பதிவை பார்க்கவும் என குறிப்பிட்டுள்ளார்.

director venkat prabhu tweet about bailwan ranganathan

குழம்பிய ரசிகர்கள் : இந்த பதிவை பார்த்து குழம்பிப் போன ரசிகர்கள், ஏய் எப்புட்றா என்றும் என்னத்தான் இருந்தாலும் பயில்வானை இப்படியா கலாய்ப்பது என கேட்டு வருகின்றனர். வெங்கட் பிரபுவின் இந்த பதிவினை பயில்வான் ரங்கநாதனும் தனது முக நூல் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். இருந்த போதும் நெட்டிசன்ஸ் என்ன என்று தெரியாமல் குழம்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X