அவரா இவர் ? ஒரு காலத்தில் மாஸ் படங்கள் தந்தவர்..வைரலாகும் புகைப்படம்
சென்னை : இயக்குனர் தரணி ஒரு காலகட்டத்தில் மிகப்பெரிய இயக்குனராக வலம் வந்தவர். தொடர் ஹிட் படங்கள் தந்து டைரக்டராக இருந்தவர்.
நல்ல நடிகர் என்ற பெயர் வாங்கிக் கொண்டிருந்த நடிகர் விக்ரமை மிகப்பெரிய மாஸ் ஹீரோவாக மாற்றிய இயக்குனர்களில் முதன்மையானவர் இயக்குனர் தரணி.
சமீபத்தில் அவர் இயக்குனர் வெங்கட்பிரபு உடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மம்முட்டியுடன் முதல் படம்
தரணி இயக்கிய முதல் படம் எதிரும் புதிரும். வீரப்பன் கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் பல அரசியல் தலையீடுகளுக்கு பிறகு 1999 ஆம் ஆண்டு ரிலீஸானது. வியாபார ரீதியாக பெரும் வரவேற்பை பெறவில்லை என்றாலும் விமர்சக ரீதியாக நல்ல பெயரை வாங்கியது. அந்த ஆண்டிற்கான சிறந்த படமாக தமிழ்நாடு ஸ்டேட் அவார்ட் வென்றது. எதிரும் புதிரும் படத்தில் நெப்போலியன், சங்கீதா, மனோரமா, செந்தில், கவுண்டமணி போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

மாஸ் ஹீரோ
நல்ல நடிகராக அனைவருக்கும் பரிச்சயமாகி இருந்த விக்ரமை ஒரு மாஸ் ஹீரோவாக மாற்றிய பெருமை இயக்குனர் தரணிக்கு உள்ளது. அதுவரை எதார்த்தமான படங்களில் நடித்துக் கொண்டிருந்த விக்ரமை தில் படத்தில் நடிக்க வைத்தார் படம் சூப்பர் ஹிட் ஆனது. விக்ரம் இளைஞர்கள் மத்தியில் சென்று சேர்ந்தார். அடுத்து தரணி இயக்கிய படம் தூள் இதிலும் ஹீரோ விக்ரம் படம் வரலாறு காணாத ஹிட்டடித்தது. விக்ரம் ஒரு மாஸ் ஹீரோ ஆகிவிட்டார் என்பதற்கு ஒரு சாட்சியாக அது அவருக்கு அமைந்தது. அதன் பிறகு விக்ரம் பல கமர்சியல் படங்களில் நடித்திருந்தாலும் தில் தூள் திரைப்படங்கள் அவைகளுக்கு முன்னோடியாக இருக்கின்றன

விஜய்க்கு கில்லி
நடிகர் விஜய் பல சூப்பர் ஹிட் படங்களில் தந்தாலும் அவரது ஹிட் படங்களில் கில்லி திரைப்படத்திற்கு ஒரு தனி இடம் இருக்கிறது. ஒட்டுமொத்த குடும்ப ஆடியன்சை திரையரங்குகளுக்கு வரவழைத்த பெருமை கில்லி திரைப்படத்திற்கு உண்டு. விஜய் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்திருப்பார். படம் பட்டிதொட்டியெங்கும் வெற்றி முழக்கம் கொட்டியது. இயக்குனர் தரணி கமர்சியல் இயக்குனராக உச்சத்தை அடைந்தார். கில்லி தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ஒக்கடு ரீமேக் ஆகும்.

வெங்கட் பிரபுவுடன் தரணி
தரணி இயக்கிய கில்லி திரைப்படத்திற்கு பிறகு அவர் சொல்லும்படியான ஒரு நல்ல படத்தை இதுவரை தரவில்லை. அதற்கு நேர் மாறாக அவருக்கு எந்த பணமும் கிடைக்காமல் சினிமா துறையை விட்டே விலகும் படியானது. நடிகர் சிம்புவை வைத்து மாநாடு படத்தின் மூலம் சூப்பர் ஹிட்டடித்த வெங்கட்பிரபு இயக்குனர் தரணியை சந்தித்து ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்க்கும் ரசிகர்கள் இயக்குனர் தரணி மறுபடியும் திரைப்படங்கள் இயக்கி கில்லி, தூள், தில் போன்ற படங்களை தர வேண்டும் என ஆசைப்படுகின்றனர்.


Click it and Unblock the Notifications











