வாத்தி படத்துல தனுஷ் நீக்க சொன்ன பாட்டு.. ரகசியம் பகிர்ந்த இயக்குநர்!

சென்னை : நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ள படம் வாத்தி. படத்தை பிரபல தெலுங்குப்பட இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார்.

படம் வரும் 17ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இதையொட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் இசை வெளியீடு பிரம்மாண்டமாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தனுஷ், சம்யுக்தா, பாரதிராஜா, வெங்கி அட்லூரி உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.

தனுஷின் வாத்தி படம்

தனுஷின் வாத்தி படம்

நடிகர் தனுஷ் கோலிவுட்டில் துவங்கிய தனது பயணத்தை பாலிவுட், ஹாலிவுட் என விரிவுப்படுத்தியுள்ளார். தனுஷிற்கு டோலிவுட்டிலும் ரசிகர்கள் அதிகமாக உள்ள நிலையில், தற்போது நேரடியாக தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் வாத்தி மற்றும் சார் என உருவாகியுள்ள படத்தின் மூலம் தெலுங்கிலும் களமிறங்கவுள்ளார் தனுஷ்.

 இயக்குநர் வெங்கி அட்லூரி

இயக்குநர் வெங்கி அட்லூரி

வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாகியுள்ளார் சம்யுக்தா மேனன். வரும் 17ம் தேதி திரையரங்குகளில் இந்தப் படம் ரிலீசாகவுள்ளது. முன்னதாக படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

தனுஷுடன் இணைந்த பாரதிராஜா

தனுஷுடன் இணைந்த பாரதிராஜா

முன்னதாக லிரிக் வீடியோவாக வெளியான வாத்தி பாடல் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளது. படத்தில் சமுத்திரகனி நெகட்டிவ் கேரக்டரில் நடித்துள்ளார். இதேபோல இயக்குநர் பாரதிராஜா படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். திருச்சிற்றம்பலம் படத்திற்கு பிறகு இந்தப் படத்திலும் அவர் தனுஷுடன் இணைந்துள்ளார்.

தமிழ் -தெலுங்கில் மாற்றங்கள்

தமிழ் -தெலுங்கில் மாற்றங்கள்

இந்தப்படத்தின் கதைக்களம் கல்வி எவ்வாறு லாப நோக்கத்திற்கு மாறியுள்ளது என்பதை கொண்டதாக எடுக்கப்பட்டுள்ளதாக இசை வெளியீட்டின்போது படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரி தெரிவித்துள்ளார். மேலும் தமிழ் மற்றும் தெலுங்கில் ரசிகர்களை கருத்தில் கொண்டு சில மாற்றங்களை செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனுஷ் நீக்க சொன்ன பாடல்

தனுஷ் நீக்க சொன்ன பாடல்

மேலும் படத்தில் மாஸான ஒரு பாடல் எடுக்கப்பட்டதாகவும் ஆனால் முழு படத்தையும் பார்த்த தனுஷ், அந்தப்பாடல் படத்தின் புனிதத்தை கெடுக்கும் என்று கருதியதால், அந்தப் பாடலை படத்திலிருந்த நீக்கி விட்டதாகவும் வெங்கி அட்லூரி தெரிவித்துள்ளார். தமிழ்ப் படங்களை அதிகமாக இயக்க தெலுங்கு இயக்குநர்கள் விரும்புவதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

டி50 படத்தை இயக்கும் தனுஷ்

டி50 படத்தை இயக்கும் தனுஷ்

வாத்தி படத்தை தொடர்ந்து தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார் நடிகர் தனுஷ். இந்தப் படத்தின் சூட்டிங் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது டி50 படத்தை இயக்கி நடிக்கவுள்ளார். மே மாதத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X