விடுதலை 2 ரிலீஸாக இன்னும் 4 வருஷம் ஆகும்.. குண்டை தூக்கிப் போட்ட வெற்றிமாறன்!

சென்னை: விடுதலை இரண்டாம் பாகத்தை நான் விரும்பும்படி எடுத்தால் படம் வெளியாக 4 வருஷம் ஆகும் என்று வெற்றிமாறன் குண்டை தூக்கிப்போட்டுள்ளார்.

இந்த படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை அள்ளியது.

இந்த படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை அள்ளியது.

Director Vethimaran has revealed the reason behind the delay in viduthalai 2

விடுதலை முதல் பாகம்: நகைச்சுவை நடிகராக இருந்த சூரி விடுதலை முதல் பாகத்தில் கடுமையாக வொர்க் அவுட் செய்து, முருகேசன் என்கிற கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். முதல் பாகத்தில் சூரியின் நடிப்பை அனைவரும் பாராட்டினார்கள். குறிப்பாக படத்தின் ஓபனிங்கில் வந்த ரயில் விபத்து காட்சி படத்திற்கு மிகப்பெரிய பிளஸாக அமைந்தது. அந்த காட்சியை ரசிகர்களை வியந்து பார்த்தார்கள். அதே போல, இளையராஜாவின் இசை படத்திற்கு கூடுதல் பலமாக இருந்தது.

விடுதலை இரண்டாம் பாகம்: எதிர்பார்ப்பை ஏற்படுத்திய முதல் பாகத்தைத்தொடர்ந்து இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இரண்டாவது பாகத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியார் நடித்து வருகிறார். அதைப்போல விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதியும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்துக்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது ஆனால் இன்னும் படப்பிடிப்பு முடிந்த பாடு இல்லை.

இன்னும் 4 வருஷம் ஆகும்: விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பு முடியாமல் தொடர்ந்து தாமதமாவதற்காக காரணத்தை இயக்குனர் வெற்றிமாறனே சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில், விடுதலை இரண்டாம் பாகத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை மூடுபனியில் எடுக்க முயற்சித்ததால் தான் தாமதமானது. தொடர்ந்து 100 நாட்கள் முயற்சி செய்தோம், அப்படி படம் எடுத்தால் நான்கு வருடங்கள் ஆகும் என்பதை உணர்ந்தேன்.

விஜய் சேதுபதியின் பிளாஷ் பேக்: எனவே சிஜியில் செயற்கையாக மூடுபனியை உருவாக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம். விடுதலை 2 படத்தில் விஜய்சேதுபதி சம்பந்தப்பட்ட ஒரே ஒரு பிளாஷ்பேக் பகுதி மட்டுமே எடுக்கவேண்டி உள்ளது. மற்ற பகுதிகள் கொண்ட காட்சிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டது. இந்த படத்தை முடித்த பிறகு தான் இயக்குநர் வெற்றிமாறன் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பின் வேலையை தொடங்குவார். சூர்யா நடிப்பில் உருவாக உள்ள வாடிவாசல் படத்திற்காக அவரது ரசிகர்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்து உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X