பேட்டைக்காளியும் வாடிவாசலும் ஒரே கதைக்களம் இல்லை.. வெற்றிமாறன் பளீச்!
சென்னை : சூர்யா -வெற்றிமாறன் கூட்டணியில் விரைவில் வாடிவாசல் சூட்டிங் துவங்கவுள்ளது.
தற்போது சூர்யா 42 படத்தில் நடித்துவரும் சூர்யா விரைவில் இந்தப் படத்தில் இணையவுள்ளார்.
இதனிடையே வெற்றிமாறனும் தன்னுடைய விடுதலை படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

வாடிவாசல் படம்
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகவுள்ளது வாடிவாசல். ஜல்லிக்கட்டு போட்டியை மையமாக கொண்டு உருவாகவுள்ள இந்தப் படத்தின் அறிவிப்பு பல மாதங்களுக்கு முன்பே வெளியான நிலையில், இருவரும் அடுத்தடுத்த கமிட்களில் பிசியாக உள்ளதால் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கப்படாமல் உள்ளது.

சூர்யா42 படத்தில் பிசியான சூர்யா
தற்போது சூர்யா சிவா இயக்கத்தில் சூர்யா 42 படத்தின் சூட்டிங்கில் பிசியாக உள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் கோவாவில் நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக பல்கேரியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு படக்குழு விரைவில் பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங்கை முடித்தபின்பே வாடிவாசல் படத்தில் சூர்யா இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரிலீசுக்கு தயாராகும் விடுதலை
இதனிடையே தன்னுடைய விடுதலை படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் இயக்குநர் வெற்றிமாறன் பிசியாக உள்ளார். இந்தப் படம் விரைவில் ரிலீசாக உள்ள நிலையில், படத்தின் இரண்டாவது பாகமும் உருவாகவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். இதனிடையே இந்தப் படத்தின் ரிலீசை அடுத்து அவர் வாடிவாசல் படத்தில் இணையவுள்ளார்.

பேட்டைக்காளி வெப் தொடர்
இதனிடையே சமீபத்தில் அவரது தயாரிப்பில் பேட்டைக்காளி வெப் தொடர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. ஜல்லிக்கட்டு காளைகளை அடக்குபவர்களுக்கும் வளர்ப்பவர்களுக்கும் இடையிலான உறவை மையப்படுத்தி வெளியான இந்தத் தொடர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆஹா ஒடிடி தளத்தில் வெளியானது.

ஒரே மாதிரியான கதை இல்லை
வாடிவாசல் படமும் ஜல்லிக்கட்டு காளைகளை மையமாக கொண்டு உருவாகவுள்ள நிலையில், இரண்டும் ஒரே மாதிரியான கதைக்களமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதனிடையே இவை இரண்டும் வேறு வேறு கதைக்களங்களை கொண்ட படைப்புகள் என்று வெற்றிமாறன் விளக்கம் அளித்துள்ளார்.

உணர்வுபூர்வமான இணைப்பு
இதுகுறித்து அவர் தனது சமீபத்திய பேட்டியில் தெளிவுப்படுத்தியுள்ளார். இந்த இரண்டு கதைகளும் வித்தியாசமானவை என்று தெரிவித்துள்ள வெற்றிமாறன், ஆனால் இரண்டையும் இணைக்கும் ஒரு உணர்வுபூர்வமான விஷயம் என்றால் அது தமிழ்தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கவனத்தை ஈர்த்த டெஸ்ட் சூட்டிங்
ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ள வாடிவாசல் படத்தின் சூட்டிங் எப்போது துவங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். முன்னதாக இந்தப் படத்தின் டெஸ்ட் சூட்டிங் நடைபெற்ற நிலையில், அதில் நடிகர் சூர்யா, ஜல்லிக்கட்டு வீரராகவே மாறியிருந்தார். இதையடுத்து அவரை அதுபோன்ற கேரக்டரில் பார்க்கும் ஆர்வம் ரசிகர்களிடம் எகிறியுள்ளது.


Click it and Unblock the Notifications











