ஜூனியர் என்டிஆருடன் அடுத்தப்படம்.. உறுதிப்படுத்திய வெற்றிமாறன்.. கொல மாசு சாரே!

சென்னை: டோலிவுட் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகர் ஜூனியர் என்டிஆர். சிறப்பான சினிமா பின்புலத்திலிருந்து வந்தபோதிலும் தன்னுடைய தனிப்பட்ட திறமையால் இவர் ரசிகர்களை கவர்ந்து வெற்றி படநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ராஜமௌலி உள்ளிட்ட முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து நடித்துள்ளார் ஜூனியர் என்டிஆர்.

தற்போது கொரட்டாலா சிவா இயக்கத்தின் தேவரா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் செப்டம்பர் 27ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களையொட்டி ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட இடங்களில் பல்வேறு பேட்டிகளில் பேசியுள்ளார் ஜூனியர் என்டிஆர்.

vetri maaran junior ntr devara movie

நடிகர் ஜூனியர் என்டிஆர்: டோலிவுட்டின் மாஸ் ஹீரோவாக தொடர்ந்து 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் ஜூனியர் என்டிஆர். ராஜமௌலி உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களுடன் நடித்துள்ள இவர் கொரேட்டாலா சிவாவுடன் இணைந்து தேவரா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் 27ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. பான் இந்தியா படமாக ரிலீசாகவுள்ள தேவரா படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ரிலீசாக உள்ளது. இதையொட்டி சென்னையிலும் தேவரா படத்தின் ப்ரோமோஷன்களில் ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர் உள்ளிட்ட பட குழுவினர் ஈடுபட்டனர்.

வெற்றிமாறன் -ஜூனியர் என்டிஆர் கூட்டணி: தன்னுடைய பேட்டிகளில் விஜய், இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்ட கோலிவுட் பிரபலங்கள் குறித்து பேசிய ஜூனியர் என்டிஆர், தான் வெற்றிமாறனுடன் நேரடி தமிழ் படத்தில் நடிக்க விரும்புவதாகவும் அந்தப் படத்தை தெலுங்கில் டப்பிங் செய்ய விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தெலுங்கின் முன்னணி ஹீரோவான ஜூனியர் என்டிஆரின் இந்த விருப்பம் குறித்து இயக்குனர் வெற்றிமாறனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த வெற்றிமாறன், தற்போது இயக்கி வரும் விடுதலை 2 உள்ளிட்ட படங்களை நிறைவு செய்துவிட்டு ஜூனியர் என்டிஆருடன் இணைய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

விடுதலை 2 படம்: அவரிடம் முன்னதாக ஸ்கிரிப்ட் ஒன்றை சொல்லி ஓகே வாங்கியுள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். மீண்டும் அவரை சந்தித்து பேசவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள விடுதலை 2 படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். கடந்த ஆண்டில் இந்த படத்தின் முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நிலையில் தற்போது படத்தின் 2வது பாகம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தையடுத்து சூர்யாவின் வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேவரா படம்: இந்நிலையில் ஜூனியர் என்டிஆருடன் வெற்றிமாறன் இணையவுள்ளது அவரது ரசிகர்களை மட்டுமில்லாமல் கோலிவுட் ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது. ஜூனியர் என்டிஆரின் 30வது படமாக உருவாகியுள்ள தேவரா படத்தின்மூலம் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் தென்னிந்தியப் படங்களில் என்ட்ரி கொடுத்துள்ளார். அவர் சென்னையின் பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழில் பேசியது அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. சென்னை என்றாலே தனக்கு ரொம்ப ஸ்பெஷல் என்றும் தன்னுடைய அம்மா ஸ்ரீதேவியின் நியாபகங்கள் அதிகமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X