Vetri maaran: விடுதலை 2 பட சூட்டிங்கை நிறுத்திடறேன்னு சொன்னேன்.. வெற்றிமாறன் வருத்தம்!

சென்னை: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவாகியுள்ளது விடுதலை 2 படம். இந்தப் படம் அடுத்தமாதம் 20ம்தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், சூரி, பவானி ஸ்ரீ உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் மிகச்சிறப்பான விமர்சனங்களை பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது பாகம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

விடுதலை முதல் பாகத்தில் சூரிக்கு நடிக்க அதிகமான வாய்ப்புகள் இருந்த நிலையில் தற்போது இரண்டாவது பாகத்தில் விஜய் சேதுபதி வாத்தியார் என்ற கேரக்டரில் அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு நடித்துள்ளார். அவர் இந்தப் படத்தில் 7 நாட்கள் மட்டுமே நடிக்க கேட்கப்பட்டதாகவும் ஆனால் தற்போது 150 நாட்கள் நடித்துள்ளதாகவும் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

vijay sethupathi viduthalai 2 movie vetri maaran

விடுதலை 2 படம்: நடிகர் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், சூரி, பவானிஸ்ரீ ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள விடுதலை 2 படம் அடுத்தமாதம் 20ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் குவித்த நிலையில் தற்போது படத்தின் இரண்டாவது பாகம் மிகவும் அதிகமான கவனத்துடன் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் கேமியோ கேரக்டரில் நடிக்கத்தான் முதலில் விஜய் சேதுபதி கமிட்டானார். அவரிடம் 8 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கேட்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது படத்தில் படத்தில் 125 நாட்களை தாண்டி நடித்துள்ளார்.

சூட்டிங்கை நிறுத்த யோசித்த வெற்றிமாறன்: இதேபோல படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ள மஞ்சு வாரியரிடமும் 3 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கேட்கப்பட்டிருந்த நிலையில் தற்போது படத்தில் அவருக்கு 2 பாடல்கள் உள்ள அளவில் அவரது கேரக்டர் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டின்போது பேசிய வெற்றிமாறன் கூறியுள்ளார். விடுதலை 2 படத்தை எடுப்பது ரொம்ப சவாலாக இருந்ததாகவும் படத்தின் சூட்டிங் தொடர்ந்து 257 நாட்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் வெற்றிமாறன் கூறியுள்ளார். தனக்கு வேறு வழியில்லாததால் சூட்டிங்கை நிறுத்திவிடுகிறேன் என்று தான் கூறியதாகவும் வெளிப்படுத்தியுள்ளார்.

நிறைவடையாத சூட்டிங்: தற்போதும் சூட்டிங் நிறைவடையவில்லை என்றும் இன்னும் ஒருசில பகுதிகள் எடுக்கப்பட வேண்டியுள்ளதாகவும் வெற்றிமாறன் கூறியுள்ளார். படத்தின் இசை வெளியீட்டில் நடிகர் விஜய் சேதுபதி, சூரி, இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டு பேசினர். வெற்றிமாறன் என்ற யூனிவர்சிட்டியில் தாங்கள் படித்தது போன்ற அனுபவத்தை விடுதலை 2 படம் கொடுத்ததாக நடிகர் விஜய் சேதுபதி, சூரி ஆகியோர் அவரை உச்சி முகர்ந்தனர். படத்தில் இளையராஜா இசையமைத்ததுடன் பாடல்களை எழுதியும் கவனத்தை ஈர்த்துள்ளார். அவரது இசையில் பாடல்கள் கவனம் பெற்றுள்ளன.

மாஸ் காட்டிய ட்ரெயிலர்: கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியானது விடுதலை படம். இநதப் படத்திற்காக இரண்டு முதல் 3 ஆண்டுகள்வரை வெற்றிமாறன் தன்னுடைய உழைப்பை கொடுத்திருந்தார். இதையடுத்து படத்தின் இரண்டாவது பாகம் கடந்த இரு ஆண்டுகளாக உருவாகி வந்தது. இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு படம் உருவாகியுள்ள நிலையில், விஜய் சேதுபதி மற்றும் மஞ்சு வாரியரின் கெமிஸ்ட்ரி மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. வாத்தியார் என்ற கேரக்டரில் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி இணைந்துள்ளார். படத்தின் ட்ரெயிலர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X