Vetri maaran: நான் யோசிச்ச கதையே வேற.. சூரியால தான் விடுதலை படம் உருவாச்சு.. வெற்றிமாறன் ஓபன்!
சென்னை: நடிகர் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், கென் கருணாஸ் உள்ளிட்டவர்கள் நடித்து இன்றைய தினம் வெளியாகி உள்ளது விடுதலை 2 படம். இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்களின் பாராட்டுக்கு உள்ளாகி வருகிறது. கடந்த ஆண்டில் இந்த படத்தின் முதல் பாகமான விடுதலை வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்திருந்தது.
விடுதலை படத்தில் விஜய் சேதுபதி கேமியோ கேரக்டரில் மட்டுமே நடித்திருந்தார். இந்நிலையில் அவரை முன்னிலைப்படுத்தி விடுதலை 2 படம் இன்றைய தினம் ரிலீசாகியுள்ளது, அவரது வாத்தியார் கேரக்டர் மற்றும் அதையொட்டிய சம்பவங்கள் படத்தில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

விடுதலை 2 படம்: நடிகர் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், சூரி. கென் கருணாஸ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது விடுதலை 2 படம். வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு விடுதலை படம் ரிலீசாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் அந்தப் படத்தை மேலும் பிரம்மாண்டமாக்கி விடுதலை 2வாக கொடுத்துள்ளார் வெற்றிமாறன். இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் இன்றைய தினம் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
விடுதலை 2 பட பிரமோஷன்: முன்னதாக இந்த படத்திற்கான அடுத்தடுத்த பிரமோஷன்களில் மிகப்பெரிய அளவில் படக்குழுவினர் ஈடுபட்டனர். குறிப்பாக விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் கென் கருணாஸ் உள்ளிட்டவர்கள் அடுத்தடுத்து பிரமோஷன்களில் சென்னை, ஹைதராபாத் என பறந்து பறந்து ஈடுபட்டதை பார்க்க முடிந்தது. இயக்குநர் வெற்றிமாறனும் படத்தின் பிரமோஷனுக்காக பேட்டிகளை கொடுத்திருந்தார். அந்தவகையில் விடுதலை 2 படத்தின் மேக்கிங் குறித்து வெற்றிமாறன் தனது பேட்டியொன்றில் பேசியுள்ளார். முதலில் எளிய மனிதர்கள் குறித்த கதையை இயக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்தப் படத்தை துவங்கியதாக வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறன் கருத்து: எந்தவிதமான கனவுகளும் இல்லாமல் ஒவ்வொரு நாளையும் எளிமையாக கழிக்கும் மனிதர்கள் குறித்த இந்தக் கதைக்காக தான் சூரியை சந்தித்து பேசியதாகவும் ஆனால் அவருடன் பேசியபோது அவரது பர்சனாலிட்டி உள்ளிட்டவற்றை பார்த்தபோது கதையை மேலும் மெருகேற்ற தோன்றியதாகவும் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். அவரை பார்த்தபோது புதிதாக போலீசில் இணையும் நபரை தனக்கு நினைவு படுத்தியதாகவும் அதை தொடர்ந்தே விடுதலை படம் உருவானதாகவும் வெற்றிமாறன் கூறியுள்ளார். சூரியின் பிட்னசே தன்னை விடுதலை படம் பண்ண தூண்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதி கேரக்டர்: விடுதலை படத்தில் சூரியின் கான்ஸ்டபிள் குமரேசன் கேரக்டரே மிகப்பெரிய அளவில் கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் படத்தின் வாத்தியார் என்ற கேமியோ கேரக்டரில்தான் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது 2வது பாகத்தில் விஜய் சேதுபதியின் கேரக்டர் விரிவுப்படுத்தப்பட்டு, அவருக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் இணைந்துள்ளார். இந்த இரு பாகங்களின் துவக்கப்புள்ளியாக, இந்தப் படங்கள் உருவாக காரணமாக சூரி இருந்ததாக வெற்றிமாறன் தற்போது கூறியுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











