Vetrimaaran: வடசென்னை 2 கண்டிப்பாக உருவாகும்.. மீண்டும் உறுதிப்படுத்திய வெற்றிமாறன்!

சென்னை: நடிகர் தனுஷ், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2018ம் ஆண்டில் வெளியான படம் வடசென்னை. வடசென்னை மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்த படத்தின் கதைக்களம் அமைந்திருந்தது. இந்த படத்தின் 2வது பாகம் குறித்து தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த சூழலில் விரைவில் வடசென்னை 2 படத்தின் வேலைகளை துவங்க உள்ளதாக இயக்குநர் வெற்றிமாறன் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். சூர்யாவின் வாடிவாசல் படத்தையும் வெற்றிமாறன் இயக்க உள்ளதாக கூறப்படும் சூழலில் முதலில் வாடிவாசல் படத்தை இயக்குவார் என்று கூறப்பட்டுள்ளது.

Dhanush Vadachennai 2 movie Vetri maaran 2

வடசென்னை படம்: நடிகர் தனுஷ், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டவர்கள் நடித்து கடந்த 2018ம் ஆண்டில் வெளியான வடசென்னை படம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தப் படம் தனுஷின் கேரியரில் மிகவும் முக்கியமான படமாக அமைந்தது, இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் மீதான நம்பிக்கை ரசிகர்கள் இடையேயும் தயாரிப்பாளர்கள் இடையேயும் மிகவும் அதிகமாக காணப்பட்டது. தொடர்ந்து தனுஷிற்கு அழுத்தமான கதைக்களங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அதிகமாக கிடைக்க வடசென்னை படம் முக்கியமான காரணமாக அமைந்தது. இந்த படத்தின் 2வது பாகம் குறித்து தொடர்ந்து ரசிகர்களிடையே கேள்விகள் இருந்து வருகின்றன.

இயக்குநர் வெற்றிமாறன்: இந்த படத்தையும் வெற்றிமாறன் இயக்க உள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் அவர் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி இயக்கி வருகிறார். கடந்த ஆண்டில் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கட்டி போட்டது. இந்நிலையில் தற்போது விடுதலை 2 படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவு கட்டத்தை எட்டியுள்ள நிலையில் படத்தில் விஜய் சேதுபதியின் ஃபிளாஷ்பேக் காட்சிகளுக்காக டீஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. இதற்காக விரைவில் வெற்றிமாறன் மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் அமெரிக்கா செல்ல உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வெற்றிமாறன் பேட்டி: இந்நிலையில் தற்போது வெற்றிமாறன் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில் விரைவில் வடசென்னை 2 படம் விரைவில் வரும் என்று தெரிவித்துள்ளார். தான் எப்போதுமே தான் இருந்த இடத்தை அடிப்படையாக கொண்டு கதைக்களங்களை உருவாக்குவதாகவும் தன்னுடைய கதைகளை மட்டுமே கையில் எடுப்பதாகவும் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். பல மொழிகளை கடந்து நிற்கும் படங்களில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் வெற்றிமாறன் கூறியுள்ளார். அடுத்ததாக சூர்யாவின் வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் இயக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. விடுதலை 2 படத்தின் ரிலீசை தொடர்ந்து இதன் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

வடசென்னை 2 படம்: இதனிடையே, வடசென்னை 2 படத்தை வெற்றிமாறன் இயக்காமல் அவரது உதவி இயக்குனர் இயக்க உள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின. இந்த படத்தை வெற்றிமாறன் தயாரிக்க உள்ளதாகவும் தனுஷ் இந்தப் படத்தின் நாயகனாக நடிக்கப் போவதில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கப்பட்ட சூழலில், தற்போது அது குறித்த இந்த தகவலையும் தெரிவிக்காமல் வெற்றிமாறன், வடசென்னை 2 படம் குறித்து பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X