Vetri maaran: வாடிவாசல் சூட்டிங் எப்ப தெரியுமா.. அப்டேட் சொன்ன வெற்றிமாறன்

சென்னை: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான விடுதலை படம் அவருக்கு சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்றுத் தந்துள்ளது.

தற்போது விடுதலை 2 படத்திற்கான வேலைகளில் மிகவும் பிசியாக செயல்பட்டு வருகிறார் வெற்றிமாறன். இந்தப் படம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் ரிலீசாக உள்ளது.

இந்நிலையில் நீண்ட காலத்திற்கு முன்பு வெற்றிமாறன் -சூர்யா காம்பினேஷனில் அறிவிக்கப்பட்ட வாடிவாசல் படத்தின் சூட்டிங் குறித்து தற்போது வெற்றிமாறன் அப்டேட் தெரிவித்துள்ளார்.

Director Vetri Maaran updates about Suryas Vaadi vaasal movie shooting

வாடிவாசல் படத்தின் சூட்டிங் அப்டேட் சொன்ன வெற்றிமாறன்: நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி, பவானிஸ்ரீ, சேத்தன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான விடுதலை படம் இயக்குநர் வெற்றிமாறனின் கைவண்ணத்தில் வெளியானது. இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு உள்ளான நிலையில், ரசிகர்களை ஏமாற்றவில்லை. படத்தில் அதிரடி கதைக்களம் மற்றும் காட்சி அமைப்புகளை சரியாக பயன்படுத்தியிருந்தார் வெற்றிமாறன். அவரது முந்தையப் படங்களை போலவே இந்தப் படமும் அழுத்தமான கதைக்களத்துடன் வெளியானது.

இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதாக முன்னதாகவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது படத்தின் இரண்டாவது பாகத்திற்கான வேலைகளில் வெற்றிமாறன் ஈடுபட்டுள்ளார். படத்தின் சூட்டிங் முன்னதாகவே முடிக்கப்பட்ட நிலையில், அதில் சில சேர்ப்புப் பணிகளை வெற்றிமாறன் மேற்கொண்டுள்ளார். இந்தப் படம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா இணையவுள்ளதாக நீண்ட காலங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்திற்கு வாடிவாசல் என்று பெயரும் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்தப் படத்தின் சூட்டிங் தொடர்ந்து தள்ளிப் போவதால் ரசிகர்கள் ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர். தற்போது சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் கங்குவா படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் வெற்றிமாறன், தன்னுடைய விடுதலை 2 படத்தின் சூட்டிங்கில் பிசியாக உள்ளதால், சூர்யா அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்திலும் பாலிவுட் படம் ஒன்றிலும் கமிட்டாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், வாடிவாசல் படம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது வெற்றிமாறன் கொடுத்துள்ள பேட்டியொன்றில் வாடிவாசல் படம், தன்னுடைய விடுதலை 2 படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்தவுடன் துவங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Director Vetri Maaran updates about Suryas Vaadi vaasal movie shooting

தற்போது படத்தின் சிஜி வேலைகள் லண்டனில் முன்தயாரிப்பு பணியாக நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார். சூர்யா இந்தப் படத்திற்காக வளர்த்துவரும் காளையை ஸ்கேன் செய்து Animatronics வேலைகள் நடைபெற்று வருவதாகவும் வெற்றிமாறன் தனது பேட்டியில் பகிர்ந்துள்ளார். இந்தப் படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளுக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு காளையுடன் சூர்யா மோதும் காட்சிகளும் ப்ரீ சூட்டாக எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விரைவில் கங்குவா படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்யவுள்ளார் சூர்யா. இந்தப் படத்தை தொடர்ந்து அவர் சுதா கொங்கரா படத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவரும் சூழலில், தற்போது வெற்றிமாறன் வாடிவாசல் படம் குறித்து பேசியுள்ளார். அடுத்ததாக சூர்யா வாடிவாசல் படத்தில் இணைய வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. ஆனால் சூரரைப் போற்று என்ற சிறப்பான படத்தை கொடுத்த சூர்யா -சுதா கொங்கரா இணை மீண்டும் கூட்டணி அமைக்கவுள்ளதும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X