Viduthalai 2 shooting: இன்னும் 30 நாள் சூட்டிங் இருக்கு.. வெளியான விடுதலை 2 பட அப்டேட்!

சென்னை: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான விடுதலை படம் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றது.

இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் குறித்த அறிவிப்பு முன்னதாகவே வெளியான நிலையில், தற்போது படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Director Vetri maarans Viduthalai 2 movie shooting update here

முதல் பாகத்தில் விஜய் சேதுபதியின் பெருமாள் வாத்தியார் கேரக்டருக்கு நல்ல வரவேற்பு இருந்த நிலையில், இரண்டாவது பாகத்தில் அந்த கேரக்டர் விரிவுப் படுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விடுதலை படம்: நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி, சேத்தன், கௌதம் மேனன், பவானி ஸ்ரீ உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது விடுதலை படம். வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தி சிறப்பான விமர்சனங்களையும் நல்ல வசூலையும் பெற்றது. விடுதலை படம் எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

விடுதலை 2 சூட்டிங்: இளையராஜா இசையில் பாடல்கள் மற்றும் பிஜிஎம் என அனைத்தும் ரசிகர்களை கவரும்வகையில் அமைந்தது. வேல்ராஜின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்த்திருந்தது. ஆர்எஸ் இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்திருந்தது. இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளதாக முன்னதாக இயக்குநர் வெற்றிமாறன் அறிவித்திருந்த நிலையில் தற்போது படத்தின் இரண்டாவது பாகத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

விஜய் சேதுபதி கேரக்டர்: முதல் பாகத்தில் விஜய் சேதுபதியின் பெருமாள் வாத்தியார் கேரக்டர் குறைவான காட்சிகளையே கொண்டிருந்தது. இந்நிலையில் இரண்டாவது பாகத்தில் இந்த கேரக்டர் விரிவு படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். இவர்கள் இருவரின் பிளாஷ்பேக் காட்சிகள் படத்தில் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் இதற்காக இருவருக்கும் de Aging தொழில்நுட்பத்தில் வயதை குறைத்துக் காட்ட வெற்றிமாறன் முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மீதமுள்ள 30 நாள் சூட்டிங்: முன்னதாக முதல் பாகத்தை எடுத்தபோதே அதிகமான காட்சிகளை வெற்றிமாறன் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இந்தப் படத்தின் ஸ்கிரிப்டில் அவர் சில மாற்றங்களை செய்துள்ளதால் படத்தின் சூட்டிங் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தப் படத்தின் சூட்டிங் இன்னும் 30 நாட்கள் எடுக்கப்படவுள்ளதாகவும் படக்குழு சார்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. மஞ்சு வாரியர் தொடர்பான காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

2வது பாகத்தில் இடம்பெற்ற நடிகர்கள்: முதல் பாகத்தில் இடம்பெறாத பிரகாஷ்ராஜ், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா உள்ளிட்டவர்களும் தற்போது இரண்டாவது பாகத்தில் இடம் பெற்றுள்ளனர். படம் அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தின் சூட்டிங்கை விரைவில் நிறைவு செய்துவிட்டு சூர்யாவின் வாடிவாசல் படத்தின் சூட்டிங்கில் வெற்றிமாறன் இணையவுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் நீண்ட காலங்களாக நடத்தப்படாமல் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X