Vetri Maaran: என்னோட இயக்கத்துல நடிக்க விஜய் தயார்.. வெற்றிமாறன் பகிர்ந்த தகவல்!

சென்னை: இயக்குநர் வெற்றிமாறன் பல சிறப்பான படங்களை ரசிகர்களுக்கு கொடுத்தவர். இவரது வடசென்னை ரசிகர்களின் ஆல் டைம் பேவரைட்.

தற்போது விடுதலை 2 படத்தின் சூட்டிங்கில் வெற்றிமாறன் பிசியாக உள்ளார். இந்தப் படத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் முக்கியமான கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சூர்யாவின் வாடிவாசல் படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளதாக வெற்றிமாறன் தற்போது அப்டேட் தெரிவித்துள்ளார்.

விஜய்யுடன் படத்தில் இணைவது குறித்து வெற்றிமாறன் பேட்டி: இயக்குர் வெற்றிமாறன் பல அழுத்தமான படங்களை தன்னுடைய சிறப்பான இயக்கத்தின்மூலம் சிறப்பாக்கி அதை வெற்றிப்படங்களாகவும் மாற்றியவர். இவரது வடசென்னை படம் ரசகர்களின் எவர்கிரீன் பேவரைட். சமீபத்தில் வெளியான அசுரன் படமும் சிறப்பான விமர்சனங்களையும் வரவேற்பையும் பெற்றுத்தந்தது. இந்தப் படத்தில் தனுஷ் நாயகனாக நடித்திருந்தார். பூமணியின் வெக்கை நாவலை மையமாக கொண்டு வெளியான இந்தப் படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தது.

Director Vetrimaaran about the Joining with Vijay in his recent interview

சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கிஷோர் உள்ளிட்ட நடிகர்களை கொண்டு சமீபத்தில் வெளியானது விடுதலை. இந்தப் படத்தையும் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை மையமாக கொண்டே வெற்றிமாறன் இயக்கியிருந்தார். இந்தப் படம் வெளியாகி சிறந்த விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது.

இந்தப் படத்தின் சூட்டிங் ஏறக்குறைய முடிவடைந்துள்ள நிலையில், தற்போது சில சேர்ப்பு வேலைகளில் வெற்றிமாறன் ஈடுபட்டுள்ளார். படம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், இந்தப் படத்தின் ரிலீசை தொடர்ந்து அடுத்ததாக சூர்யா லீட் கேரக்டரில் நடிக்கும் வாடிவாசல் படத்தில் இணையவுள்ளதாக வெற்றிமாறன் தற்போது தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்தப் பேட்டியில் அவர் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

நடிகர் விஜய்யுடன் இணைவது குறித்த கேள்விக்கு பதிலளித்த வெற்றிமாறன், நீண்ட காலத்திற்கு முன்பே, தான் விஜய்யுடன் படத்தில் இணைவது குறித்து பேசியுள்ளதாகவும் அவரும் தன்னுடைய இயக்கத்தில் நடிக்க மிகுந்த ஆர்வம் காட்டியதாகவும் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். தற்போது தன்னுடைய கமிட்மெண்ட்களை முடித்துக் கொண்டு, மீண்டும் விஜய்யுடன் இதுறித்து பேசவுள்ளதாகவும் வெற்றிமாறன் கூறியுள்ளார்.

அப்போது தான் மீண்டும் விஜய்க்கு ஒரு கதையை சொல்லவிருப்பதாகவும, அந்தக் கதை விஜய்க்கு பிடிக்கும் பட்சத்தில் தாங்கள் இணைவது உறுதியாகும் என்றும் வெற்றிமாறன் கூறியுள்ளார். கமர்ஷியல் படங்களில் நடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார் விஜய். ஆனால், கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை இயக்கிவருபவர் வெற்றிமாறன். இவர்கள் இருவரின் கூட்டணி எப்படி அமையும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X