Vachennai 2 :வடசென்னை குறித்து அப்டேட் சொன்ன வெற்றிமாறன்.. ரசிகர்கள் உற்சாகம்
சென்னை : இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த வாரத்தில் வெளியான விடுதலை படம் மிகச்சிறப்பான வெற்றியை அவருக்கு கொடுத்துள்ளது.
இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் இன்னும் நான்கு மாதங்களில் வெளியாகவுள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றிமாறனின் அடுத்தடுத்த படங்கள் வெளியான நிலையிலும் அவரது வடசென்னைக்கு இருக்கும் மவுசு இன்னும் குறையவில்லை. அந்தப் படத்தின் அடுத்த பாகம் குறித்த கேள்விகளையே அவர் தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறார்.

இயக்குநர் வெற்றிமாறன்
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் அடுத்தடுத்த வெற்றிப்படங்கள் வெளியாகி வருகின்றன. இவரது இயக்கத்தில் வெளியான வடசென்னை, அசுரன் உள்ளிட்ட படங்கள் மக்களின் உணர்வுகளை தட்டியெழுப்பி சிறப்பான வெற்றியை கொடுத்துள்ளன. இந்நிலையில் கடந்த மாதம் 31ம் தேதி வெளியாகியுள்ள விடுதலை படம் அதே உணர்வை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது. இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் தற்போது வெளியாகி சூப்பர் டூப்பர் வெற்றியை சுவைத்துள்ளது.
தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாகத்திற்கான வேலைகளையும் தற்போதே வெற்றிமாறன் திட்டமிட்டு வருகிறார். முதல் பாகத்துடனேயே இணைந்து இந்த பாகத்தின் சூட்டிங்கும் நடைபெற்ற நிலையில் இன்னும் 10 நாட்கள் சூட்டிங் மீதமுள்ளதாகவும் அதையும் விரைவில் எடுத்து முடிக்கவும் வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை தொடர்ந்து வெற்றிமாறன் எந்தப் படத்தில் இணையவுள்ளார் என்பது குறித்தும் அப்டேட் வெளியாகியுள்ளது.
ஜல்லிக்கட்டை மையமாக கொண்டு வெற்றிமாறன் மற்றும் சூர்யா இணையவுள்ள வாடிவாசல் படம் அறிவிப்புடன் அப்படியே உள்ளது. இந்தப் படத்தின் அறிவிப்பை தொடர்ந்து வெற்றிமாறன் மற்றும் சூர்யா இருவரும் அடுத்தடுத்த படங்களில் பிசியாகிவிட்ட சூழலில் இந்தப் படத்தின் சூட்டிங் துவக்கப்படாமலேயே உள்ளது. படத்தின் டெஸ்ட் சூட் மட்டும் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற சூரி, படம் வேற லெவலில் உருவாகவுள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வடசென்னை 2 குறித்து வெற்றிமாறன்
இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங் இந்த ஆண்டின் இறுதியில் துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே வடசென்னை படத்தின் இரண்டாவது பாகம் குறித்த கேள்விகளையே தொடர்ந்து வெற்றிமாறன் மற்றும் தனுஷ் இருவரும் எதிர்கொண்டு வருகின்றனர். வாத்தி படத்தின் இசை வெளியீட்டின்போதும் இந்தப் படம் குறித்து நடிகர் தனுஷ் பேசியிருந்தார். முன்னதாக விடுதலை படத்தின் சக்சஸ் பார்ட்டியின்போதும் இந்தக் கேள்வியை வெற்றிமாறன் எதிர்கொண்டிருந்தார்.

இந்நிலையில் நேற்றைய தினம் ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள ருத்ரன் படத்தின் ஆடியோ வெளியீட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இயக்குநர் வெற்றிமாறன், விடுதலை 2 மற்றும் வாடிவாசல் படங்களை முடித்துவிட்டு வடசென்னை படத்தின் வேலைகளில் தான் கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார். நீண்ட நாட்களாக தமிழ் கேரக்டரின் அடுத்த தாண்டவத்தை பார்க்க காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த அப்டேட் மிகச்சிறந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது.
இந்தத் தகவல் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் அதிகமாக தனுஷ் ரசிகர்களால் பரப்பப்பட்டு வருகிறது. விடுதலை படத்தை தொடர்ந்து சூர்யா -வெற்றிமாறன் காம்பினேஷனில் உருவாகவுள்ள வாடிவாசல் படத்திற்கு மிகவும் அதிகமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆனால் அவை எல்லாவற்றையும்விட வடசென்னையின் அடுத்த பாகத்திற்குத்தான் மிகவும் அதிகமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.


Click it and Unblock the Notifications











