வெற்றியை கொண்டாடும் வெற்றிமாறன், தங்க நாணயம் பரிசளித்தார்
Recommended Video
சென்னை : அசுரன் பட டெக்னிஷன்ஸ் கொண்டாட்டத்தின் காரணம் என்ன?
வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி.எஸ்.தாணு தயாரிப்பில் அசுரன் திரைப்படம் வெள்ளிக்கிழமை அன்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

தனுஷ், மஞ்சு வாரியார், கென், டீஜெ , பாலாஜி சக்திவேல், பிரகாஷ் ராஜ், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இத்திரைப்படம் எழுத்தாளர் பூமணியின் "வெக்கை" நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்.
இப்படம் ஒரு வெற்றிப்படமாக அமைய முக்கிய காரணமாக இருந்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கு அசுரன் திரைப்படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் ஒரு தங்க நாணயத்தை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். அதை பெற்று கொண்ட கலைஞர்கள் மிக்க மகிழ்ச்சியில் கொண்டாடிவருகிறார்கள்.
படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக ஒருவர் பின் ஒருவராக படத்தின் வெற்றிக்கு உறுதுணையாய் இருந்த கலைஞர்களை பரிசுகள் மூலம் மகிழ்ச்சியில் திக்கு முக்காட வைப்பது இப்போது ட்ரெண்டிங் ஆக உள்ளது. பிகில் திரைப்படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு விஜய் தங்க மோதிரம் கொடுத்து ஆரம்பித்து வைத்த இந்த அன்பு பரிமாற்றம் சூர்யா, வெற்றிமாறன் என தொடர்கிறது. சமீபத்தில் கோமாளி பட இயக்குனருக்கு கார் பரிசாக கிடைத்தது தயாரிப்பாளரிடமிருந்து.

எப்போதுமே ஊக்குவிக்க வேண்டும் , தட்டி கொடுக்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள், சரியான நேரத்தில் அத்தகைய காரியங்களை செய்தால் தான் அதன் பெருமையும் மகிழ்ச்சியும் இரட்டிப்பாக இருக்கும்.
ஒரு படத்தை சிறப்பானதாகவும், அழகாகவும் மக்களுக்கு படைக்க முக்கிய காரணமாக இருந்த தொழில்நுட்ப கலைஞர்களை பாராட்டி அன்பளிப்பு அளிக்கிறது வரவேற்கத்தக்கது.
தமிழ் சினிமாவில் இத்தகைய காரியங்களை நிறைய செய்தவர் எம் ஜி ஆர். அதன் பிறகு ரஜினியும் நிறைய சமயங்களில் தங்க சங்கிலி பரிசு அளித்துள்ளார். விஜயகாந்த் அவர்கள் பல நெருக்கமான சினிமா நண்பர்களுக்கு - உழைக்கும் வர்கதினருக்கு பல உதவிகள் செய்திருக்கிறார்.
சத்தம் இல்லாமல் பல சர்பிரைஸ் கொடுப்பவர் சத்யராஜ் அவர்கள். என்றுமே இப்படி பல நல்ல விசயங்கள் நடக்க வேண்டும் . பாராட்டுவதும் பரிசளிப்பதும் ஒரு நல்ல கலைஞனுக்கு மிக முக்கியம் .


Click it and Unblock the Notifications











