Don't Miss!
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- News இந்த ஆண்டு UPSC தேர்வானவர்களில் 34.65% பெண்கள், 5.02% முஸ்லிம்கள்.. முழு டேட்டா இதோ!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்கு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Lifestyle ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- Sports கே எல் ராகுல் செய்த செயல்.. எச்சரித்த தோனி.. ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கிடைத்த தண்டனை
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
விடுதலை.. வாடிவாசல்.. அடுத்ததாக வெற்றிமாறன் யாரை இயக்கப் போறாரு தெரியுமா.. வெளியான சூப்பர் அப்டேட்!
சென்னை : நடிகர் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டவர்களை கொண்டு தற்போது விடுதலை படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் வெற்றிமாறன்.
முன்னதாக அறிவிக்கப்பட்ட சூர்யாவின் வாடிவாசல் படத்தையடுத்து அவர் இயக்கவுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் வாடிவாசல் படத்திற்கு பிறகு இவர் டோலிவுட் பக்கம் போகப் போகிறாராம். அங்கு சூப்பர் ஹீரோ ஒருவருடன் வெற்றிமாறன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.
நான் நீண்ட முடி வளர்த்ததால் சந்தேகப்பட்டார் கார்த்தி.. நடிகர் சூர்யா!
இயக்குநர் வெற்றிமாறன்
இயக்குநர் வெற்றிமாறன் அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். இவரது இயக்கத்தில் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என வெற்றிப் படங்களின் எண்ணிக்கை நீளமானது. தற்போது நகைச்சுவை நடிகர் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
வாடிவாசல் படம்
இதையடுத்து சூர்யா நடிப்பில் வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இவரது படங்களில் அழுத்தமாக கதைக்களம் இருப்பதே இவரது சிறப்பாக காணப்படுகிறது. நடிக்கத் தெரியாதவர்களைக் கூட சிறப்பாக நடிக்க வைத்து விடுவார் வெற்றி மாறன். இந்நிலையில் நடிப்பு அசுரனாக மாறிவரும் சூர்யாவின் காம்பினேஷனில் வெற்றிமாறன் இயக்கவுள்ள இந்தப் படம் சிறப்பான கவனத்தை பெற்றுள்ளது.
வாடிவாசல் படத்தின் டெஸ்ட் சூட்
இந்தப் படத்தின் அறிவிப்பு முன்னதாக வெளியான போதிலும் இன்னும் சூட்டிங் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்தப் படத்தில் முன் தயாரிப்பு பணிகள் அதிகமாக மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதால் இந்த தாமதம் என்று கூறப்படுகிறது. முன்னதாக படத்தின் டெஸ்ட் சூட் நடத்தப்பட்டது. இதில் ஜல்லிக்கட்டு மாடுகளுடன் மல்லுக்கட்டினார் சூர்யா.
ஜல்லிக்கட்டில் சூர்யா பயிற்சி
மேலும் தொடர்ந்து சொந்தமாக இரண்டு ஜல்லிக்கட்டு மாடுகளை வாங்கி சூர்யா இந்தப் படத்திற்காக பயிற்சி பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல் ஜல்லிக்கட்டு வீரர்களுடனும் அவர் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் சூர்யா 41 படத்தில் நடித்துவரும் நிலையில் விரைவில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கவனம் பெற்ற வெற்றிமாறன்
தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றிப் படங்களை தொடர்ந்து இந்திய அளவில் கவனம் பெற்ற இயக்குநராக மாறியுள்ளார் வெற்றி மாறன். இதனால் இவரது மார்க்கெட் வேல்யூ அதிகரித்துள்ளது. மேலும் கோலிவுட்டில் மட்டுமில்லாமல் மற்ற இன்டஸ்ட்ரியிலும் முன்னணி நடிகர்கள் இவரது இயக்கத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஜூனியர் என்டிஆருடன் இணையும் வெற்றிமாறன்?
அந்த வகையில் வாடிவாசல் படத்தை தொடர்ந்து அடுத்ததாக டோலிவுட்டின் சூப்பர் ஹீரோ ஜூனியர் என்டிஆருடன் வெற்றிமாறன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெற்றிமாறனுடன் இதுகுறித்து ஜூனியர் என்டிஆர் பேசியுள்ளதாகதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வெற்றிமாறன் சொன்ன கதைக்களம் அவருக்கு பிடித்து அவர் ஓகே சொன்னதாகவும் கூறப்படுகிறது.
டோலிவுட் சூப்பர் ஹீரோ
ஜூனியர் என்டிஆர் தொடர்ந்து முன்னணி இயக்குநர்களுடன் கைகோர்த்து படங்களை கொடுத்து வருகிறார். சமீபத்தில் ராஜமௌலியுடன் இவர் கூட்டணி அமைத்த ஆர்ஆர்ஆர் படத்தில் இவரது நடிப்பு சிறப்பான விமர்சனங்களை பெற்றது. இதில் ராம்சரணுடன் இணைந்து நடித்திருந்த போதிலும், இவரது கேரக்டர் படத்தில் மிகவும் சிறப்பாக அமைந்தது.