Director Vetrimaaran: வருது.. வருது.. வட சென்னை 2 அப்டேட் சொன்ன வெற்றிமாறன்!

சென்னை: இயக்குநர் வெற்றிமாறன் உணர்வுப்பூர்வமான கதைகளால் சர்வதேச அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இவரது வடசென்னை, விடுதலை உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சிறப்பான வசூலையும் குவித்து வருகின்றன.

அந்த வகையில் தற்போது விடுதலை 2 படத்தை இயக்கி வரும் வெற்றிமாறன், விரைவில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் படத்தையும் இயக்கவுள்ளார்.

Director Vetrimaaran revealed about Vadachennai 2 movie

இயக்குநர் வெற்றிமாறன்: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களுக்கு நெருக்கமாக அமைந்தவை. சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் குவித்து வருபவை. ரசிகர்களின் நாடித்துடிப்பை உணர்ந்து படங்களை இயக்கிவரும் வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான விடுதலை படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை ரீச் செய்தது. இந்தப் படத்தின் கதைக்களம் மற்றும் சூரி நாயகனாக நடித்தது, விஜய் சேதுபதியின் நடிப்பு என படத்தின் பிளஸ்களை அடுக்கிக் கொண்டே போகலாம். சில கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.

விடுதலை 2 படம்: இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை தற்போது உருவாக்கி வருகிறார் வெற்றிமாறன். இந்தப் படத்திலும் சூரி மற்றும் விஜய் சேதுபதி லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். முன்னதாக முதல் பாகத்தில் விஜய் சேதுபதிக்கு காட்சிகள் குறைவாக இருந்த நிலையில், தற்போது இரண்டாவது பாகத்தில் அவருக்கான காட்சிகளை வெற்றிமாறன் அதிகப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இந்தப் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்யவுள்ளார் வெற்றிமாறன். இந்தப் படத்தை தொடர்ந்து சூர்யாவின் நடிப்பில் வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார்.

வடசென்னை 2 அப்டேட்: இந்தப் படங்களை தொடர்ந்து நீண்ட நாட்களாக அவரது இயக்கத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உள்ளது வடசென்னை 2 படம். இந்தப் படத்தின் முதல் பாகம் தனுஷ் நடிப்பில் மிகப்பெரிய அதிர்வுகளை கோலிவுட்டில் ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் குறித்து தொடர்ந்து பேசி வருகிறார் வெற்றிமாறன். இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் வெற்றிமாறனின் விடுதலை படத்திற்கு ஸ்பெஷல் ஜூரி விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய வெற்றிமாறன் விரைவில் வட சென்னை 2 படம் வெளியாகும் என்று கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

குறைகளுடன்தான் படங்களை இயக்குகிறேன்: வெற்றிமாறன் மேடை ஏறி விருதை பெற்றவுடன் ரசிகர்கள் அவரிடம் வடசென்னை படம் குறித்த அப்டேட்டை கேட்கத் துவங்கினர். இதற்கு பதிலளிக்கும் வகையில்தான் அவர் அந்தப்படம் விரைவில் வருது என்று குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், திரைப்படங்களில் பல குறைகள் மற்றும் தவறுகளுடன் தான் எடுத்து முடிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் படத்தின் கதைக்களம் பாதிக்கப்படாதபடி சில சமரசங்களை செய்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். அடுத்தடுத்த படங்களில் இதை குறைத்துக் கொள்ள முயற்சிப்பேன் என்றும் கூறியுள்ளார். சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் படங்களை உருவாக்கவே தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வடசென்னை படம்: கடந்த 2018ம் ஆண்டில் வெற்றிமாறன் -தனுஷ் கூட்டணியில் வெளியானது வடசென்னை. கேங்ஸ்டர் கதைக்களத்தில் வெளியான இந்தப் படத்தில் ஆன்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். அன்புவின் எழுச்சி என்ற லீடுடன் முடிக்கப்பட்ட இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் குறித்து தொடர்ந்து கேட்கப்பட்டுவரும் நிலையில், வெற்றிமாறன் -தனுஷ் காம்பினேஷனில் அசுரன் படம் வெளியானது. ஆனாலும் வட சென்னை 2 குறித்து ரசிகர்கள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர். அடுத்ததாக சூர்யாவுடன் இணையவுள்ள நிலையில், அடுத்ததாக வடசென்னை 2 படத்திற்கான அறிவிப்பை வெற்றிமாறன் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X