Viduthalai collectiions : விடுதலை படம் இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?
சென்னை : நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி, சேத்தன், பவானி ஸ்ரீ ஆகியோர் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது விடுதலை படம்.
இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சூரி நாயகனாக நடித்து சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளார்.
விரைவில் படத்தின் இரண்டாவது பாகமும் ரிலீசாகவுள்ள நிலையில், அதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விடுதலை படம்
நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி, சேத்தன், பவானி ஸ்ரீ உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது விடுதலை. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் தற்போது வெளியாகியுள்ளது. படத்தில் சிறப்பான திரைக்கதையால் மிரட்டியுள்ளார் இயக்குநர் வெற்றிமாறன். போலீஸ் டிரைவர் குமரேசனாக சூரியும், வாத்தியாராக விஜய் சேதுபதியும் படத்தில் மிரட்டலான கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
கேரியர் பெஸ்ட் படம்
சூரி மற்றும் விஜய் சேதுபதியின் கேரியர் பெஸ்ட் படமாக விடுதலை அமைந்துள்ளது. படத்தின் திரைக்கதை மட்டுமில்லாமல் காட்சி அமைப்புகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. ரிப்பீட்டட் ஆடியன்ஸ் இந்தப் படத்திற்கு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் பாகத்திற்கு கிடைத்துள்ள அதிரிபுதிரி வெற்றியை தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாகமும் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

விரைவில் விடுதலை 2 படம்
இன்னும் 4 மாதங்களுக்குள் படத்தின் இரண்டாவது பாகமும் ரிலீசாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாவது பாகத்திற்கான காட்சிகளும் ஏறக்குறைய படமாக்கப்பட்ட நிலையில், அதன் சூட்டிங் இன்னும் 10 நாட்கள் மீதமுள்ளதாகவும் அதன் படப்பிடிப்பை விரைவில் எடுத்து முடிக்கவும் வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளாராம். முதல் பாகத்தை போலவே இரண்டாவது பாகமும் சிறப்பான வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாகத்தில் விஜய் சேதுபதிக்கு அதிகமான காட்சிகள் இல்லாத நிலையில், இரண்டாவது பாகத்தில் அவர் அதிகமான காட்சிகளில் இடம்பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது.
6 நாட்களில் ரூ.26 கோடி வசூல்
இதனிடையே கடந்த 6 நாட்களில் விடுதலை படம் 26 கோடி ரூபாயை வசூலித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து படம் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. சில திரையரங்குகளில் புதிதாகவும் இந்தப் படத்தை வெளியிட்டுவரும் சூழலில் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியுள்ள இந்தப் படம் மேலும் பல சாதனைகளை படைக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.

அடுத்த பாக வேலைகளில் பிசி
விடுதலை படம் கொடுத்துள்ள அதிகப்படியான வரவேற்பால் தற்போது இரண்டாவது பாகத்திற்கான முன்னெடுப்புகளில் மிகவும் உற்சாகமாக பங்கேற்று வருகிறார் வெற்றிமாறன். விரைவில் விடுதலை 2 படம் ரிலீசாகவுள்ள நிலையில், அடுத்ததாக நீண்ட எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ள வாடிவாசல் படத்திற்காக சூர்யாவுடன் இணையவுள்ளார். தொடர்ந்து கமலுடன் அடுத்தப்படத்தில் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











