Vetrimaaran : நான் அப்படி செய்து இருக்கக்கூடாது.. ஆடுகளம் பட தவறை பற்றி பேசிய வெற்றிமாறன்!
சென்னை : ஆடுகளம் படத்தில் அப்படி ஒரு தவறை நான் செய்து இருக்கக்கூடாது என்று வெற்றிமாறன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை திரைப்படம் திரையரங்கில் கடந்த வாரம் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டடித்து வருகிறது.

விடுதலை படத்தின் முதல் பாகம் வெளியாகி 7 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை ரூ. 26 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விடுதலை : காமெடி நடிகராக இருந்த சூரி, கையில் துப்பாக்கி வைத்துக்கொண்டு தரமான நடிப்பை விடுதலை படத்தில் கொடுத்து இருக்கிறார். இப்படத்தில் காதல், ரொமான்ஸ் லுக், அதிரடியான சண்டை என அனைத்தையும் திறம்பட செய்து திறமையான நடிகர் என்று பெயர் எடுத்துள்ளார். வாத்தியார் பெருமாள் என்ற கேரக்டரில் விஜய்சேதுபதியும், உயர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் கௌதம் மேனன், OC என்ற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் சேத்தன் அருவருப்பான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

தரமான நடிப்பு : விடுதலை படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் தங்களது கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து நடித்துள்ளனர். ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை சொல்லும் திரைப்படமாகவும், காவல்நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் நடக்கும் கொடுமையை இத்திரைப்படம் வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது. இத்திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு ஏ சான்றிதழ் கொடுத்த போதும், பொதுமக்கள் இந்த படத்தை தங்களின் குழந்தைகளோடு பார்த்து வருகின்றனர்.
ஆடுகளம் : இந்நிலையில், விடுதலை திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில், வெற்றிமாறன் அளித்துள்ள பேட்டியில், ஆடுகளம் படத்தில்வரும், அடி வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாய்ங்களா... உன்ன வெயிலுக்கு காட்டாம வளர்த்தாய்ங்களா... என்ற பாடல் வரியை கேக்கும் போதே செம காண்டா இருக்கு, என்னடா பாட்டு இது என்று தோன்றுகிறது.

அதை செய்திருக்கக்கூடாது : ஒரு பெண் வெள்ளையாக இருந்ததால் அந்த பெண்ணை ரசிக்கணுமா என்ற கேள்வி வருகிறது. அப்போது இந்த பாடலை கேட்டதுமே சரி ஒகே என்று சொல்லி விட்டேன். அந்த நேரத்தில் அந்த வரி ரொம்ப பரபரப்பாக பேசப்பட்டது. அந்த படம் வெளியானபோதே எனக்கு கொஞ்சம் நெருடலாகத்தான் இருந்தது. அதை நான் தவிர்த்து இருக்கலாம், நான் அதை செய்திருக்கக்கூடாது, அந்த வரியை மாற்ற சொல்லி இருந்தால், சினேகன் வேறு வரியை எழுதிக்கொடுக்க மாட்டேன் என்று சொல்லி இருக்கமாட்டார் இருந்தாலும், அப்போது அது மனதிற்கு சரி என்று பட்டது என இயக்குநர் வெற்றிமாறன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











