இளையராஜா பயோபிக்.. அருண் மாதேஸ்வரனுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறதா? வெற்றிமாறன் சொன்ன தகவல்!

சென்னை: இளையராஜாவின் வாழ்க்கை கதை அவரது பெயரான இளையராஜா என்ற பெயரிலேயே திரைப்படமாக உருவாக இருக்கிறது. இந்தப்படத்தில் தனுஷ் இளையராஜாவாக நடிக்க இருக்கிறார். இப்படத்தை இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்க உள்ள நிலையில், அவருக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக இயக்குநர் வெற்றிமாறன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லராக அசத்தி இருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், குபேரா என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா கமிட்டாகி உள்ளார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Director vetrimaaran talks about ilayaraaja biopic

நடிகர் தனுஷ்: அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வரும் தனுஷ், இசை உலகில் ஜாம்பவான், இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் இளையராஜாவாக நடிக்க உள்ளார். இப்படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ளார். தன்னுடைய சொந்த கதைக்கு இளையராஜாவே இசையமைக்க உள்ளார். மேலும் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா பணியாற்றும் இப்படத்தில் கலை இயக்குனராக முத்துராஜ் பணியாற்ற உள்ளதாக அண்மையில் அறிக்கை வெளியானது.

பர்ஸ்ட் லுக் போஸ்டர்: இப்படத்தின் பணிகள் கடந்த பூஜையுடன் தொடங்கியது இதில், சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு, இளையராஜா பயோபிக் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். அந்த போஸ்டரில் கையில் ஹார்மோனிய பெட்டியுடன் இளையராஜா முதன்முதலில் சென்னைக்கு வந்திறங்கியதை நினைவுபடுத்தும் வகையிலான பர்ஸ்ட் லுக் இருந்தது. இப்படத்தை திரையில் பார்க்க அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.

அழுத்தம் கொடுக்கப்படுகிறது: இந்நிலையில் இயக்குநர் வெற்றிமாறன் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் தொகுப்பாளர், நீங்கள் மிகப்பெரிய இளையராஜா ரசிகர். அவரின் பயோபிக் படத்தை இயக்கும் வாய்ப்பு உங்களுக்கு வந்திருந்தால், இந்த காட்சியை ஹைலைட் ஆக வைத்து இருப்பீர்கள் என்று கேட்டார். இதற்கு பதிலளித்த வெற்றிமாறன், நிச்சயமாக இந்த கேள்விக்கு என்னால் பதிலளிக்க முடியாது. ஏற்கனவே அருண் மாதேஸ்வரனுக்கு கடந்த 2 நாட்களாக பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொருவரும் திறமையானவர்கள் தான். ஒரு ரசிகனாக அப்படத்தில் நானும் பணியாற்ற தயாராக உள்ளேன் என பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X