Vetrimaaran: வாடிவாசல் சூட்டிங் எப்ப ஸ்டார்ட் ஆகும் தெரியுமா.. வெற்றிமாறனே சொன்ன அப்டேட்!
சென்னை: நடிகர் சூர்யாவின் கங்குவா படம் அடுத்ததாக ரிலீசுக்கு தயாராகியுள்ளது. வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குனர் சிவா இயக்கி முடித்துள்ளார். படம் சர்வதேச அளவில் 10 மொழிகளில் வெளியாக உள்ள சூழலில் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இணையவுள்ளார் சூர்யா. இந்தப் படத்தை அவர் கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்து தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நீண்ட காலங்களாக அறிவிப்புடன் நின்றுள்ள வாடிவாசல் படத்தின் சூட்டிங் குறித்து இயக்குனர் வெற்றிமாறன் தனது பேட்டியில் பேசியுள்ளார். விடுதலை 2 படத்தின் சூட்டிங் இன்னும் 20 நாட்களில் நிறைவடையவுள்ளதாகவும் இதையடுத்து வாடிவாசல் படத்தின் சூட்டிங் துவங்கும் என்றும் அவர் தனது பேட்டியில் பேசியுள்ளார். இது ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

வாடிவாசல் படம்: நடிகர் சூர்யா அடுத்தடுத்து வெற்றிப்பட கூட்டணியில் இணைந்து தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்து வருகிறார். தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா படம் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்ட நடிகர்கள் சூர்யாவுடன் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. படம் 10 மொழிகளில் ரிலீசாகவுள்ள சூழலில் அதற்கான பணிகள் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் சூர்யா.
இறுதிக்கட்டத்தில் விடுதலை 2: இதனிடையே இயக்குனர் வெற்றிமாறனுடன் சூர்யா இணையவுள்ள வாடிவாசல் படம் நீண்ட காலங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் அறிவிப்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே வெளியான சூழலில் இதற்கான டெஸ்ட் சூட் காளை மாடுடன் நடத்தப்பட்டது. உடனடியாக படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் விடுதலை படத்தில் கமிட்டானார் வெற்றிமாறன். இந்தப் படத்தை முடித்துவிட்டு சூர்யாவுடன் வாடிவாசலில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் தொடர்ந்தது விடுதலை 2 படத்தின் ஷூட்டிங் நடத்தப்பட்டு தற்போது இந்த படம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
20 நாட்கள் சூட்டிங்: இன்னும் இந்த படத்தின் சூட்டிங் 20 நாட்கள் உள்ளதாக வெற்றிமாறன் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு அடுத்ததாக சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணையவுள்ளதாகவும் அதற்கான முன் தயாரிப்பு பணிகளுக்கு மூன்று மாத கால அவகாசம் தேவைப்படும் என்றும் வெற்றிமாறன் அந்த பேட்டியில் தெளிவுபடுத்தியுள்ளார். இதையடுத்து வாடிவாசல் படத்தின் சூட்டிங் இன்னும் மூன்று மாதங்களில் துவங்க உள்ளது குறித்து அவர் உறுதிப்படுத்தியுள்ளார். இதனிடையே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படத்தின் ஷூட்டிங் அதற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யாவுடன் இணையும் அமீர்: இதையடுத்து சூர்யாவும் வாடிவாசலுக்கு தயாராகி விடுவார் என்று எதிர்பார்க்கலாம். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து வாடிவாசல் படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் அமீர் சூர்யாவிற்கு வில்லனாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அவர் சூர்யாவுடன் இணைவாரா என்ற கேள்வியும் ரசிகர்களிடையே தொடர்ந்து காணப்படுகிறது. ஆனால் அமீரை வைத்து வாடிவாசல் படத்தை இயக்குவதில் வெற்றிமாறன் உறுதியாக இருப்பதும் தெரிய வருகிறது. இந்நிலையில் வாடிவாசல் படம் குறித்து அடுத்தடுத்து இயக்குனர் அமீர், மிஷ்கின் உள்ளிட்டவர்கள் பேசி வருகின்றனர்.
பாராட்டி பேசிய அமீர் -மிஷ்கின்: இந்த படத்தின் ஸ்கிரிப்ட் குறித்து வெற்றிமாறன் தங்களிடம் பேசியதாகவும் மிகச் சிறப்பான இந்த கதை சர்வதேச அளவில் சூர்யாவை கொண்டு செல்லும் என்றும் அவர்கள் உறுதியுடன் பேசியிருந்தனர். இதோ அதோ என்று இந்த படத்தின் சூட்டிங் சில ஆண்டுகளை கடந்துள்ள சூழலில் இன்னும் மூன்று மாத காலங்களில் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கவுள்ளதாக வெற்றிமாறன் கூறியுள்ளது ரசிகர்களை கவரும் விஷயமாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











