Viduthalai 2 Box office prediction: விடுதலை 2 படத்தின் முதல் நாள் வசூல் கணிப்பு! எத்தனை கோடி வரும்?

சென்னை: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், சேத்தன், கௌதம் மேனன், கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'விடுதலை 2' திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய வெளியாகி உள்ள நிலையில், இப்படம் முதல் நாள் எவ்வளவு வசூலை பெறும் என்று இந்த செய்தியில் பார்க்கலாம்.

விடுதலை முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட படமாக இருந்தது. இந்த படத்தில் கனிமவளம் திருடும் அரசுக்கு எதிராக விஜய் சேதுபதி, மலைவாழ் மக்களை ஒன்று திரட்டி இயக்கத்தை அமைத்து செயல்பட்டு வருகிறார். இதனால் அந்த இயக்கத்தை காவல்துறையை கொண்டு ஒடுக்க அரசு முயற்சி செய்கிறது. இதில் காவல்துறையில் பணிபுரியும் சூரி அந்த மக்களுக்கு ஆதரவாக செயல்பட, அவர் பல சங்கடத்தை சந்திக்கிறார். இதைத்தொடர்ந்து, சூரி பெருமாள் வாத்தியாரை பிடித்து கொடுக்கிறார்.பெருமாள் வாத்தியார் யார்.. ஏன் அவர் புரட்சியாளராக மாறினார் என்பதை பார்க்க அனைவரும் இரண்டாம் பாகத்திற்காக காத்திருந்தனர்.

viduthalai 2 vijay sethupathi box office 2

முதல் நாள் வசூல்: இப்படம் சூரியின் திரை வாழ்வில் மிகவும் முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படமாக மாறியது. விடுதலை 2 படத்திலும் சூரியின் நடிப்பு பெரிய அளவில் பேசப்படும் வகையில் படத்தில் டிரைலர் அட்டகாசமாக இருந்தது. விடுதலை 2 படத்திற்கு தமிழ்நாடு அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கியதை அடுத்து, இன்று மட்டும் காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை 5 காட்சிகள் திரையிடப்பட்டன. படத்தின் டிக்கெட் புக்கிங் மதியம் ஒரு மணி நிலவரப்படி 2.58 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், படத்தின் முதல் நாள் வசூல் 3 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விடுதலை முதல் பாகம் 23.85 கோடி வசூலித்த நிலையில், இரண்டாம் பாகம் அதைவிட நல்ல வசூலை அள்ளும் என நம்பப்படுகிறது.

வசூல் வேட்டை: விஜய் சேதுபதியின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான மஹாராஜா திரைப்படம் வெளியானது. 2024ஆம் ஆண்டில் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று மகாராஜா. இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து சாச்சனா, அனுராக் காஷ்யப், நட்டி நட்ராஜ், சிங்கம் புலி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் உலகளவில் ரூ. 110 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படம் கடந்த சில வாரங்களுக்கு முன் சீனாவில் வெளியாகி வசூல் வேட்டையாடியது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X