விஜய்யுடன் வெற்றிமாறன் திடீர் சந்திப்பு.. அப்ப தளபதி 65 இயக்குனர் இவர் தானோ?
தளபதி 65 படத்தை வெற்றிமாறன் இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: நடிகர் விஜய்யை திடீரென சந்தித்து பேசியிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.
பிகில் படத்தை தொடர்ந்து, 'கைதி' இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார் விஜய். இப்படத்திற்கு தளபதி 64 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார்.

மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர். இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னை மற்றும் டெல்லியில் நடைபெற்றது. மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் சிமோகாவில் நடந்து வருகிறது.
இந்நிலையில் நடிகர் விஜய்யை இயக்குனர் வெற்றிமாறன் சென்னையில் திடீரென சந்தித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பின் போது, விஜய்யிடம் ஒரு கதையை வெற்றிமாறன் கூறினாராம். அது விஜய்க்கு பிடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. கூடிய விரைவில் விஜய் - வெற்றிமாறன் இணைவது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த அசுரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படம் ஹிட்டானது. இந்த படத்தை அடுத்து, சூரியை ஹீரோவாக வைத்து புதிய படம் ஒன்றை வெற்றிமாறன் இயக்கி வருகிறார்.
வெற்றிமாறனும், விஜய்யும் படம் செய்யப் போவதாக கடந்த ஆண்டே பேசப்பட்டது. ஏற்கனவே அவர் விஜய்யிடம் கதை ஒன்றை சொல்லியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சூர்யாவும் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் இருக்கிறது.


Click it and Unblock the Notifications











