twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வடசென்னை பிரச்சனை: மன்னிப்பு கோரிய வெற்றிமாறன், சர்ச்சை காட்சிகள் நீக்கப்படும் என உறுதி

    |

    Recommended Video

    வட சென்னை திரைப்படத்தில் படகு முதலிரவு காட்சி நீக்கம்! : இயக்குனர் வெற்றி மாறன்- வீடியோ

    சென்னை: வட சென்னை படத்தில் சர்ச்சைக்குறிய காட்சிகளுக்காக இயக்குனர் வெற்றிமாறன் மன்னிப்பு கோரியுள்ளார்.

    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், அமீர், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ள வட சென்னை திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

    Director Vetrimaran seeks apologies

    இப்படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் மீனவ சமுதாய மக்களை இழிவுபடுத்துவதாகவும், குற்றப் பின்னணி கொண்டவர்களாகவும் சித்தரிப்பதாக எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

    இதற்கு விளக்கமளித்துள்ள இயக்குனர் வெற்றிமாறன், எங்களுடைய நோக்கம் எந்த ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு எதிராகவும் அரசியலோ சினிமாவோ செய்வது இல்லை. இந்த படத்தில் உள்ள சில காட்சிகள் மீனவ சமுதாயத்தை இழிவாக சித்தரிப்பதாக தெரிவித்திருந்தனர். குறிப்பாக கப்பலில் நடக்கும் முதலிரவு காட்சி. அந்த காட்சியை நீக்குவதற்கான வேலைகளில் இறங்கி விட்டோம். இன்னும் சில தினங்களில் அந்த காட்சி படத்திலிருந்து நீக்கப்படும்.

    எங்கள் நோக்கம் யாரையும் இழிவுபடுத்துவதோ, குறைத்துக் காட்டி சினிமாவில் பெயரும் புகழும் சம்பாதிப்பதோ இல்லை. அதேபோல் அடுத்த பாகங்களில், வட சென்னை பகுதி மக்களின் பிரச்சனைகளை விவாதிப்பதும், அங்குள்ள இளைஞர்கள் நெருக்கடியிலிருந்து மீண்டு எப்படி எல்லா துறைகளிலும் கால் பதிக்கிறார்கள் என்பதையும் பதிவிடுவது தான்.

    வட சென்னை படத்தின் பாத்திரப் படைப்புகளும், சம்பவங்களும் யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிக்கிறோம், மன்னிப்பு கேட்டுகொள்கிறோம் என அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியுள்ளார்.

    English summary
    Director Vetrimaran came forward to seek apologies for Vada Chennai controversial scenes against fishermen community.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X