twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அநீதிகளையும் கேள்வி கேட்கும் திரைப்படங்களும்… சமூக நீதி ஆயுதங்களே… சூர்யாவுக்கு வெற்றிமாறன் ஆதரவு !

    |

    சென்னை : அநீதிகளையும் கேள்வி கேட்கும் திரைப்படங்களும் கூட சமூக நீதி ஆயுதங்களே. ஆகையால் நாங்கள் ஜெய் பீம் படக்குழுவுடன் எப்போதும் நிற்கிறோம் என இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

    ஜெய்பீம் அமேசான் பிரைமில் நவம்பர் 2-ம் தேதி வெளியானது. இதில், சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

    உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானத் திரைப்படத்தை அனைத்து தரப்பு மக்களும் பாராட்டினார்.

    பிக்பாஸ் சீசன் 5...இந்த வாரம் வெளியேற போகிறவர்...மூவரில் யார்? பிக்பாஸ் சீசன் 5...இந்த வாரம் வெளியேற போகிறவர்...மூவரில் யார்?

    ஜெய்பீம்

    ஜெய்பீம்

    மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இத்திரைப்படம் வெளியானதில் இருந்து பரபரப்புக்கும் சர்ச்சைக்கும் பஞ்சம் இல்லாமல் உள்ளது. இந்தப் படம் குறித்து முதலில் சர்ச்சையை கிளப்பியது பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தான். ஜெய் பீம் திரைப்படம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுத் தருவதை விட, வன்னியர்களை இழிவுபடுத்துவதில்தான் கவனமாக இருந்ததாக கூறி சூர்யாவிட்ம் கேள்வி எழுப்பினார். இதற்கு சூரியாவும் உரிய பதிலை அளித்திருந்தார்.

    வன்முறை பேச்சு

    வன்முறை பேச்சு

    இருப்பினும் சர்ச்சைகள் தொடர்ந்து வந்தன. மயிலாடுதுறை பா.ம.க மாவட்ட செயலாளர் சூரியா மயிலாடுதுறை வந்தால் அவரை தாக்குபவர்களுக்கு 1 லட்சம் பரிசுவழங்கப்படும் என வன்முறையைச் தூண்டும் வகையில் பேசி இருந்தார். இவரின் இந்த பேச்சுசை இயக்குனர் பா. ரஞ்சித், நடிகை ரோகிணி ஆகியோர் கண்டித்து இருந்தனர்.

    அன்புமணிக்கு கடிதம்

    அன்புமணிக்கு கடிதம்

    இயக்குனர் பாரதிராஜா, அன்புமணி ராமதாஸ்க்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் கடந்த கால சம்பவங்களைப் படமாக்கும் போது.. அதை படமாகப் பார்த்துவிட்டு சமூக மாற்றத்திற்கு அது எவ்வகையில் பயனாகும் என்பதை மட்டுமே பார்க்க வேண்டும். அதில் பூதக்கண்ணாடியை அணிந்துகொண்டு குற்றம் பார்க்கத் தொடங்கினால் எந்த ஒரு படைப்பும் எளியோருக்காக பேசாமல் முடங்கிவிடும். சினிமாவை விட இங்கு கவனம் செலுத்த நிறைய வேலைகள் உள்ளன. சமூக மாற்றங்களுக்கான உங்கள் போராட்டங்களே நிறைய உள்ளன. தங்கள் தகுதிக்கு நீங்கள் இங்கு வரவேண்டாமே இந்த கடிதத்தில் எழுதி இருந்தார்.

    வெற்றிமாறன் ஆதரவு

    வெற்றிமாறன் ஆதரவு

    இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்தை பகிர்ந்துள்ளார். அதில், இந்தப் படத்தின் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் அவல நிலையை உலகறியச் செய்ய வேண்டும் என்ற இயக்குநர் த.செ.ஞானவேலின் பொறுப்புணர்வும், சமூக நீதியை நிலைநிறுத்துவதில் திரையிலும், நிஜத்திலும் நடிகர் சூர்யா மேற்கொள்ளும் தொடர் முயற்சிகளும் உண்மையிலேயே ஊக்கமளிக்கின்றன.

    #WeStandWithSuriya

    #WeStandWithSuriya

    #JaiBheem இத்தகைய படங்கள் சமூக நீதி ஏற்படக் கூடாது என விரும்புவோருக்கு பதற்றத்தை ஏற்படுத்துவது இயல்பே. #WeStandWithSuriya சமூகத்தில் நிலவும் பேதங்களையும், அநீதிகளையும் கேள்வி கேட்கும் திரைப்படங்களும் கூட சமூக நீதி ஆயுதங்களே. ஆகையால் நாங்கள் ஜெய் பீம் படக்குழுவுடன் எப்போதும் நிற்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.

    சரியான விஷயத்திற்காக

    சரியான விஷயத்திற்காக

    மேலும், சரியான விஷயத்தைச் செய்வதற்காக யாரும் தாழ்வாக உணரும் நிலைக்குத் தள்ளப்படக் கூடாது. நடிகர் சூர்யா, ஒரு திரை நட்சத்திரத்திற்கான அர்த்தத்தை மறுவரையறை செய்துள்ளார் என்று பதிவிட்டுள்ளார்.

    English summary
    Jai bhim controversy : Director Vetrimaran support to Suriya
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X