விடுதலை2 படத்தில் அப்படி என்ன வசனம் இருக்கு.. மியூட் போட்ட சென்சார் போர்டு.. குழந்தைகள் பார்க்கலாமா?

சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி, மஞ்சுவாரியர் நடித்திருக்கும் 'விடுதலை 2' திரைப்படம் உலகம் முழுவதும் டிசம்பர் 20ந் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இத்திரைப்படத்தின் தணிக்கை குழு சான்றிதழ் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு வெளியான விடுதலை 2 அந்த படத்தில், விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. முதல்பாகத்தில் விஜய் சேதுபதி கைது செய்யப்பட்ட நிலையில், அடுத்த பாகத்தில் நடக்கப்போவது என்ன, வாத்தியாராக இருந்த விஜய்சேதுபதி, ஏன் போராளியாக மாறினார் என்பதை இரண்டாம் பாகத்தில் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக இருந்தனர்.

viduthalai 2 vijay sethupathi 2

விடுதலை 2: இந்த ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் விடுதலை 2 திரைப்படத்தில் டிரைலரில், வன்முறை எங்க மொழி இல்லை... ஆனால், எங்களுக்கு அந்த மொழியும் பேசத் தெரியும் என்றும் தத்துவம் இல்லா தலைவர்கள் ரசிகர்கள் மட்டும்தான் உருவாக்குவாங்க...அது முன்னேற்றத்திற்கு வழி வகுக்காது.. என்ற அழுத்தமான அரசியல் வசனங்களும் டிரைலரில் இடம் பெற்று படத்தை பார்க்கும் ஆவலை தூண்டி உள்ளது. மேலும்,'தினம் தினமும்' படம் இளையராஜாவின் காந்த குரலில் மனதை வருடும் வகையில் வெளியாகி இணையத்தில் டிரெண்டிங்கில் இருக்கிறது.

சென்சார் போர்டு: விடுதலை 2 படம் 20ந் தேதி வெளியாக இருக்கும் இத்திரைப்படத்தின் சென்சார் சர்டிபிகேட் பற்றிய தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி விடுதலை 2 படத்திற்கு A சர்டிபிகேட்டை பெற்றுள்ளது. மேலும் படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 52 நிமிடங்கள் ஆகும். இதில் பல இடங்களில் வசனங்கள் மியூட் செய்யப்பட்டிருக்கிறது. அதிலும் பிரச்சனையை தீர்ப்பதற்கான ஆயுதங்களை மக்களே அந்தந்த போராட்ட களத்தில் இருந்து உருவாக்கிக்கணும். இந்த வசனம் கொஞ்சம் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் படத்தில் பல கெட்ட வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளது. வெற்றிமாறன் படத்தில் இப்படிபட்ட வார்த்தைகளும் வசனங்களும் இருக்கத்தான் செய்யும் என்று தணிக்கைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X