''விடுதலை'' டிரைலரே சும்மா அதிருது..மெயின் பிக்சர் இனிமேல் தான்.. சூரிக்கு ருசித்த முதல் வெற்றி!
சென்னை : வெற்றிமாறன் இயக்கி உள்ள விடுதலை படத்தின் டிரைலர் 25 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
ஆர்எஸ் இன்போடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்தில் விஜய்சேதுபதி, சூரி, பவானிஸ்ரீ, கௌதம் மேனன் என ஏராளமானோர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இதில், தனுஷ் பாடிய உன்னோடு நடந்தா பாடல் பெரிய அளவில் இணையத்தில் வரவேற்பை பெற்றது.

ஜெயமோகனின் துணைவன் கதை
எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை அடிப்படையாக விடுதலை என்ற படத்தை வெற்றி மாறன் இயக்கி உள்ளார். இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இந்த படத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். இதுவரை நகைச்சுவை நடிகராக இருந்த சூரி இந்த படத்தின் மூலம் ஹீரோவாக மாறி உள்ளார்.

கான்ஸ்டபிளாக சூரி
இதில் சூரி கான்ஸ்டபிளாக நடித்துள்ளதால், கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி கடுமையான உடற்பயிற்சி செய்து சிக்ஸ் பேக்குடன் மாஸாக மாறி உள்ளார். இதில் விஜய் சேதுபதி வாத்தியாராக நடித்துள்ளார். இப்படத்திற்காக நடிகர் சூரி ரூ.30 லட்சம் சம்பளம் வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

விடுதலை டிரைலர்
விடுதலை திரைப்படத்தின் இசை வெளியீடு மற்றும் டீசர் வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. இதில் வெளியான டிரைலரில் மனுஷன் பொறக்கும் போதே ஒருத்தன் மேல ஒருத்தன் கீழ ஒருத்தன் சைடுல என பிரிக்குற நீங்க பிரிவினைவாதிகளா? இல்ல சமுதாயத்துல எல்லாருமே ஒண்ணுனு போராடுற நாங்க பிரிவினைவாதிகளா? என விஜய் சேதுபதி பேசிய மாஸ் வசனம், படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மெயின் பிக்சரே இனிமேல் தான்
இந்நிலையில், விடுதலை திரைப்படத்தின் டிரைலர் 25 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது டிரெண்டாகி வருகிறது. இந்த போஸ்டரைப் பார்த்த ரசிகர்கள் ''விடுதலை'' டிரைலரே சும்மா அதிருது, மெயின் பிக்சரே இனிமேல் தான் என்றும் டிரைலர் வெற்றியின் மூலமே நடிகர் சூரிக்கு வெற்றியை ருசித்துவிட்டார் என அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











