முதல்வர் ஸ்டாலினை சந்தித்த இயக்குநர் வெற்றிமாறன்.. கொரோனா நிவாரண நிதியாக ரூ.10 லட்சம் நன்கொடை!
சென்னை: இயக்குநர் வெற்றிமாறன் தமிழக அரசுக்கு 10 லட்சம் ரூபாய் கொரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாள்தோறும் 30 ஆயிரத்தை தாண்டி வருகிறது.
கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

முதல்வர் கோரிக்கை
கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

இயக்குநர் வெற்றிமாறன்
இதனை தொடர்ந்து பலரும் தமிழக அரசின் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் வெற்றிமாறன் முதல்வர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.

ஏஆர் முருகதாஸ்
ஏற்கனவே நடிகர் சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் இணைந்து ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கினர். இயக்குநர் ஏஆர் முருகதாஸ் 25 லட்சம் ரூபாய் நிதி வழங்கினார்.

இயக்குநர் ஷங்கர்
நடிகர் அஜித் வங்கி பரிவர்த்தனை மூலம் 25 லட்சம் ரூபாய் நிதி அளித்தார். இயக்குநர் ஷங்கரும் 10 லட்சம் ரூபாய் முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











