எனக்கு நிறைவே இல்லை.. அசுரன் தானாக உருவான படம்.. வெற்றிமாறன் கூறிய பகீர் தகவல்!
சென்னை: அசுரன் படம் தனக்கு நிறைவில்லாத படம் என்று கூறியுள்ளார் இயக்குநர் வெற்றிமாறன்.
கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் அசுரன். பூமணியின் வெக்கை நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட்டது.
தனுஷ், மஞ்சு வாரியர். கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

அசுரனுக்கு 2 விருதுகள்
இந்நிலையில் 2019 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் கடந்த திங்கள் கிழமை அறிவிக்கப்பட்டன. இதில் அசுரன் படம் இரண்டு விருதுகளை தட்டி தூக்கியது. அசுரன் படம் சிறந்த தமிழ் படத்துக்கான விருதையும், நடிகர் தனுஷுக்கு அசுரன் படத்திற்காக சிறந்த நடிகர் என்ற விருதும் கிடைத்துள்ளது.

அசுரனுக்கு பாராட்டு விழா
இதனை தொடர்ந்து பிரபலங்கள் பலரும் படத்தின் இயக்குநரான வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அசுரன் திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்ததற்கு சென்னையில் பாராட்டுவிழா நடைபெற்றது.

மிகப்பெரிய சவால்கள்
இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் தாணு, இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் சக நடிகர்கள் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன், அசுரன் திரைப்படம் எடுத்த போது தனக்கு மிகப்பெரிய சவால்களை சந்திக்க வேண்டி இருந்ததாகக் குறிப்பிட்டார்.

நிறைவாக செய்ய முடியவில்லை
அந்த நேரத்தில் தான் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், படத்தை வெளியிடுவதற்கான தேதி மிகக் குறுகிய காலமாக இருந்தது என்றும் கூறினார். இதனால் தன்னால் முழுமனதோடு நிறைவாக வேலை செய்ய முடியவில்லை என்றும் கூறினார்.

மனநிறைவு இல்லாத படம்
ஆகையால் அசுரன் தானாகவே உருவான படம் என்றும் கூறினார் வெற்றி மாறன். சமூகத்தில் இன்றைக்கு இந்தப் படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றிருந்தாலும் தனக்கு முழு மனநிறைவை தராத படம் இந்த அசுரன் படம் என்றும் கூறியுள்ளார் வெற்றிமாறன்.


Click it and Unblock the Notifications











