கோவிலுக்கு பிகினியில் போவீங்களா? கண்ணியமாக பேசுங்க.. சர்ச்சையில் சிக்கிய 'ஹாட்ஸ்பாட் 2மச்‘ இயக்குநர்
சென்னை: 'ஹாட் ஸ்பாட் 2 மச்' படத்தின் இயக்கநர் விக்னேஷ் கார்த்திக் பேசிய மோசமான கருத்துக்கு பொதுவெளியில் பலரும் அவரை திட்டி வருகின்றனர். இயக்குனர் விக்னேஷ் கார்த்திக், மூன்று வெவ்வேறு கதைகளை ஒரே படத்தில் சேர்த்து 'ஹாட் ஸ்பாட் 2 மச்' என்ற பெயரில் இயக்கி உள்ளார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், அஸ்வின் குமார், ரக்ஷன், எம்.எஸ். பாஸ்கர், தம்பி ராமையா, பிரிகிடா, பவானி ஸ்ரீ, ஆதித்யா பாஸ்கர் மற்றும் சஞ்சனா திவாரி ஆகியோரும் நடித்துள்ளனர். ஜனவரி 23ந் தேதி வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.
ஹாட் ஸ்பாட் 2 மச் இரண்டாவது கதையில், தம்பி ராமையாவின் மகள் சஞ்சனா திவாரி, வெளிநாட்டில் படித்து விட்டு இந்தியா வருகிறாள். நாகரீகம் என்ற பெயரில் மிகவும் கவர்ச்சியாக உடை அணிகிறாள். இதனால், தந்தை மகளுக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. மகளுக்கு அப்பா எப்படி பாடம் புகட்டினார் என்று கதை நகரும். இதுகுறித்து, படத்தின் இயக்குநர் 'Space' சிலருடன் பேசினார்.

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்: அப்போது பேசிய பெண் ஒருவர், எல்லா விஷயத்திற்கும் விட்டுக்கொடுத்து தான், இன்று நாம் இந்த நிலைமையில் இருக்கிறோம். நாம் அட்ஜெஸ்ட் செய்யக்கூடாது. ஆனால், அப்டேட்டாக வேண்டும். காலம் முழுக்க அடுத்தவர்கள் என்ன சொல்வார்கள்? இவர்கள் கஷ்டப்படுவார்கள் என்று நினைத்து கொண்டே இருந்தால், நமக்காக வாழ முடியாது, நமக்கு விருப்பப்பட்ட உடையை அணிய முடியாது. அடுத்தவர்களுக்காக உடை அணிய வேண்டும் என்றால், இன்னும் பழைய காலத்தை போல மற்றவர்களுக்கு பெண்கள் அடிமையாக தான் இருக்க வேண்டும். புடவை கட்டினால் பெண்களுக்கு அழகு என்று சொன்னார்கள். ஆனால், இப்போது புடவையிலும் இடுப்பு தெரிகிறது என்கிறார்கள். இதனால், அசிங்கமாகவும், ஆபாசமாகவும் பேசுபவர்கள் பேசிக் கொண்டுதான் இருப்பார்கள். இந்த சமுதாயத்திற்காகவோ, தவறாக பேசுவார்கள் என்பதற்காகவோ நாம் உடை அணிய முடியாது என்றார்.
பிடிவாதக்கார பெண்: பெண்ணின் இந்த கேள்விக்கு பதில் அளித்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக், உடை அணிவதற்கு என்று என்று ஒரு வரைமுறை இருக்கிறது. அதைத்தான் நான் படத்தில் சொல்லி இருக்கிறேன். அந்த படத்தில் தம்பிராமையா தன்னுடைய மகளிடம் இப்படித்தான் உடை அணிய வேண்டும் என கட்டாயப்படுத்தவில்லை. ஆனால், என் உலகத்திற்குள், என் உறவினர்கள், நண்பர்கள் முன் மட்டும் எனக்காக சில விஷயங்களை மாற்றிக் கொள் என்று தான் அந்த படத்தில் தம்பிராமையா பேசி இருக்கிறார். இதைக்கூட செய்யாத பெண்களை நான் ஒரு பிடிவாதக்கார பெண்ணாகத்தான் பார்க்கிறேன். இவர்கள் முற்போக்கு பெண்ணாகவோ, ஃபேமிலிஸ்டாகவோ என் பார்வைக்கு தெரியவில்லை என்று பேசிய விக்னேஷி கார்த்திக், கோயிலுக்கு பிகினி உடை அணிந்து போவீங்களா என்ன கேட்டார். இந்த கருத்துக்கு எதிர்ப்பு எழுந்ததை அடுத்து விக்னேஷ் கார்த்திக்கை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
கடும் விமர்சனம்: இணையவாசி ஒருவர், மிகவும் உணர்ச்சியற்ற கருத்துக்காக நான் பகிரங்கமாக மன்னிப்பைக் கடுமையாகக் கோருகிறேன். நீங்கள் படம் எடுங்க, எடுக்காமல் போங்க, ஆதரவு கொடுங்கள் கொடுக்காமல் போங்கள, ஆனால் முதலில் பொதுவெளியில் எப்படிப் பேச வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள். "இடம் பொருள் ஏவல்" என்பதை முதலில் நீங்கள் தான் கருத்தில் கொள்ள வேண்டும். மற்றவர்களுக்குப் போதிப்பதற்கு முன், நீங்களே அதைப்பின்பற்றுங்கள் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











