இந்த பையனுக்கு எவ்ளோ டேலண்ட் இருக்கு பாரு...வைரலாகும் விக்னேஷ் சிவனின் வலிமை பதிவு!

சென்னை : அஜித் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் படம் தான் வலிமை.

ஹச்.வினோத் இயக்கிய இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா.பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கும் இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுவது அனைவரும் அறிந்த ஒன்றே.

நீண்ட நாட்களாக எந்த அப்டேட்டும் வெளிவராமல் இருந்த நிலையில் வலிமை அப்டேட் ஹாஸ்டேக் வைரலாக பரவியது. இதை கவனித்த படக்குழு சில நாட்களாகவே பல அப்டேட்டுகளை வரிசையாக வெளியிட்டு ரசிகர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்து வருகின்றனர்.

 வலிமை அப்டேட்

வலிமை அப்டேட்

ரசிகர்கள் செய்யும் ஆரவாரத்தை பார்த்த படக்குழுவினர் வரிசையாக அப்டேட்டுகளை கொடுத்து வருகின்றனர்.இப்படத்தின் நாங்க வேற மாரி பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியிருந்தார், மேலும் இப்பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.வேற மாரி ஹிட் கொடுத்து படத்தின் எதிர்பார்ப்பை தூண்டியது.

 அம்மா பாடல்

அம்மா பாடல்

வேற மாரி பாடல் ஹிட் தொடர்ந்து,அம்மா செண்டிமெண்ட் பாடலையும் எழுதியுள்ளார் விக்னேஷ் சிவன்.இப்பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பாடலின் புகைப்படங்களை தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார் விக்னேஷ் சிவன்.இப்பாடலின் ஹிட் தொடர்ந்து,இதன் சம்மந்தப்பட்ட மீம்ஸ் சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவ தொடங்கியுள்ளது.

 எவ்ளோ டேலண்ட்

எவ்ளோ டேலண்ட்

அம்மா பாடலை மையப்படுத்தி ,7ஜி ரெயின்போ காலனி படத்தில் வரும் காட்சியை மாற்றி மீம்ஸ் உருவாக்கி உள்ளனர் நெட்டிசன்ஸ்,லிரிக்ஸ் விக்னேஷ் சிவன் என்பதை கட்டம் போட்டு ,இந்த பையனுக்கு எவ்ளோ டேலண்ட் பாரேன் என்று அஜித் ரசிகர்கள் சொல்ல, வாயை மூடிக்கொண்டு அழுவது போல இருக்கும் மீம்ஸ் தற்போது வைரலாக பரவுகின்றது. இதை விக்னேஷ் சிவன் தனது சமூகவலைத்தளபக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

 நல்ல முன்னேற்றம்

நல்ல முன்னேற்றம்

குறிப்பிட்ட சில படங்களே இயக்கினாலும் தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உள்ளார் விக்னேஷ் சிவன். வலிமை படத்தின் பாடல்கள் மூலம் இவரது மேல் இருக்கும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து உள்ளது. மேலும் இப்போது இவரது இயக்கத்தில் காதுவாக்குல ரெண்டு காதல் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.இப்படத்தில் விஜய் சேதுபதி,நயன்தாரா,சமந்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.விக்னேஷ் சிவன்,நயன்தாராவின் சொந்த நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர் .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X