LIK படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருந்தாரா.. தயாரிப்பாளர் குறித்து விக்னேஷ் சிவன் ஆதங்கம்!

சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் சூட்டிங் நிறைவடைந்து படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. படத்தின் பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், லவ் டுடே படத்திற்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் நடித்துவரும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறி வருகிறது.

படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் க்ரீத்தி ஷெட்டி ஜோடி சேர்ந்துள்ளார். காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் குறித்து தற்போது விக்னேஷ் சிவன் இன்டர்வியூ ஒன்றில் பேசியுள்ளார். நடிகை நயன்தாரா இந்தப் படத்தை தயாரித்துள்ள நிலையில், படத்தின் பட்ஜெட் குறித்தும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

vignesh shivan lik movie sivakarthikeyan lik


LIK படம்: நடிகர் பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக படத்தில் க்ரீத்தி ஷெட்டி நடித்துள்ளார். படத்தை நயன்தாரா தன்னுடைய ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ள நிலையில் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அவரது இசையில் படத்தின் முதல் பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளது. இந்தப் படம் அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் சூட்டிங்: படத்தில் இடம்பெற்றுள்ள கிராபிக்ஸ் காட்சிகளை முடிக்க கால அவகாசம் தேவைப்படுவதால் படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக இந்தப் படத்திற்கு LIC என்று பெயரிடப்பட்டது. இந்த டைட்டில் சர்ச்சைகளை சந்தித்த நிலையில் LIK என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. ரொமாண்டிக் ஜானரில் உருவாகியுள்ள இந்தப்படத்தின் அப்டேட் மற்றும் போஸ்டர்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகிவரும் நிலையில் படத்தின் பெரும்பாலான காட்சிகளை சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் விக்னேஷ் சிவன் படமாக்கியுள்ளார்.

இயக்குநர் விக்னேஷ் சிவன்: இந்நிலையில் இந்தப் படத்தின் கதை குறித்து தற்போது படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசியுள்ளார். முன்னதாக இந்தப் படத்தை கடந்த 2018ம் ஆண்டிலேயே சிவகார்த்திகேயனை வைத்து இயக்கவிருந்த நிலையில் படத்தின் பட்ஜெட் குறித்து தயாரிப்பாளர் கேள்வி எழுப்பியதாகவும் அதனால் படம் கைவிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.படத்தின் கதைக்களம் எதிர்காலத்தில் நடப்பது போன்று உருவாகியுள்ளதாகவும் அதனால் படத்தின் பட்ஜெட் அதிகமாக இருந்ததாகவும் கூறிய விக்னேஷ் சிவன், இதன் காரணமாக தன்னிடம் வந்து இதுகுறித்து பேசிய தயாரிப்பாளர் எதிர்காலத்தை வைத்து படமெடுக்காமல் நிகழ்காலத்தில் படமெடுக்கக் கூறியதாகவும் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.


கடுப்பேற்றிய தயாரிப்பாளர்: பாகுபலி படம் பீரியட் படமாக அமைந்த நிலையில், பட்ஜெட் காரணமாக அந்தப் படத்தை நிகழ்காலத்தை வைத்து எடுக்க முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தன்னிடம் நிகழ்காலத்திற்கு படத்தை மாற்ற சொன்ன அந்த தயாரிப்பாளரிடம் தான் அடுத்ததாக போகவில்லை என்றும் அவர் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுததியுள்ளார். இதனால்தான் இந்தப் படத்தை தானே தன்னுடைய சொந்த தயாரிப்பில் உருவாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X