Vignesh shivan: உன்னைவிட்டா யாரும் எனக்கில்லை.. ஜோடியாக புகைப்படங்களை வெளியிட்ட விக்னேஷ் சிவன்!
சென்னை: நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஆண்டில் திருமணம் செய்து கொண்டு, வாடகைத்தாய் முறையில் இரு குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகியுள்ளனர்.
தொடர்ந்து சமூக வலைதளங்களில் இருவரும் ஆக்டிவாக காணப்படுகின்றனர். சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் நயன்தாரா இணைந்திருந்தார்.
இதனிடையே தொடர்ந்து நயன்தாராவும் தானும் இணைந்துள்ள புகைப்படங்களை அடுத்தடுத்து வெளியிட்டு விக்னேஷ் சிவன் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

நயன்தாராவுடன் ரொமாண்டிக் புகைப்படங்களை வெளியிட்ட விக்னேஷ் சிவன்: நடிகை நயன்தாரா தொடர்ந்து பல ஆண்டுகளாக ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரது பலதரப்பட்ட நடிப்பால் ரசிகர்கள் இவரை கொண்டாடி வருகின்றனர். இவரது பல படங்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. கோலிவுட், டோலிவுட், மல்லுவுட் உள்ளிட்ட தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள நயன்தாரா, தற்போது பாலிவுட்டிலும் தன்னுடைய என்ட்ரியை கொடுத்துள்ளார்.
சமீபத்தில் நடிகர் ஷாருக்கானுடன் நயன்தாரா இணைந்திருந்த ஜவான் படம் அட்லீ இயக்கத்தில் வெளியாகி 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது. இதன்மூலம் பாலிவுட்டில் சிறப்பான என்ட்ரியை கொடுத்துள்ள நயன்தாரா, தொடர்ந்து தன்னுடைய பயணத்தை தொடர்வார் என்று எதிர்பார்க்கலாம். இந்தப் படத்தினை தொடர்ந்து தமிழிலும் ஜெயம் ரவியுடன் நயன்தாரா நடித்திருந்த இறைவன் படம் சமீபத்தில் வெளியானது.
இயக்குநர் விக்னேஷ் சிவனை தொடர்ந்து 7 ஆண்டுகள் காதலித்த நயன்தாரா, கடந்த ஆண்டில் திருமணம் செய்துக் கொண்டார். இவர்களது திருமணம் இந்திய அளவில் நடிகர்கள் சூழ மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதையடுத்து வாடகைத்தாய் முறையில் இரு குழந்தைகளுக்கும் தாயாகியுள்ளார். இந்தக் குழந்தைகள் பிறந்து ஒரு ஆண்டு நிறைவை கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவரும் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

விக்னேஷ் சிவன் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தன்னுடைய மனைவி நயன்தாராவுடன் இணைந்து இவர் வெளியிட்டுவரும் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. சமீபத்தில் நயன்தாராவும் இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ள நிலையில் அவரும் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது புதிய புகைப்படங்களை நயன்தாராவுடன் இணைந்து வெளியிட்டுள்ளார்.
இந்தப் புகைப்படங்களில் இருவரின் கெமிஸ்ட்ரியும் வழக்கம்போல மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. மேலும் அவளுடன் இருக்கும் ஒருவித ஸ்நேகிதன் ஆனேன் என்றும் அவர் இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் வெளியிடப்பட்ட 4 மணிரேநத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்றுள்ளது. அஜித்துடன் இணைந்து படமியக்க விக்னேஷ் சிவன் முன்னதாக கமிட்டான நிலையில், அதிலிருந்து விலகினார். இந்நிலையில் அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து படமியக்கவுள்ளார் விக்னேஷ் சிவன்


Click it and Unblock the Notifications











