குழந்தைகளுடன் பொங்கலை கொண்டாடிய விக்கி -நயன் ஜோடி.. க்யூட் வீடியோ இதோ!
சென்னை : இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் தங்களது கேரியரில் பெஸ்டை கொடுத்து வருகின்றனர்.
கடந்த 7 ஆண்டுகளாக காதலித்துவந்த இவர்கள் சில மாதங்களுக்கு முன்பு மகாபலிபுரம் அருகில் உள்ள ரெசார்ட்டில் திருமணம் செய்துக் கொண்டனர்.
தொடர்ந்து வாடகைத்தாய் மூலம் இரண்டு குழந்தைகளுக்கும் பெற்றோராகியுள்ளனர்.

நயன்தாரா -விக்னேஷ் சிவன் ஜோடி
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்துவந்த நிலையில், கடந்த ஆண்டில் இவர்களது திருமணம் பிரபல நடிகர்கள், உறவினர்கள் சூழ பிரம்மாண்டமான அளவில் நடந்தது. சூப்பர்ஸ்டார் தாலி எடுத்துக் கொடுக்க மிகவும் சிறப்பாக இவர்களது திருமணம் நடந்தேறியது.

காதலாகிய நட்பு
நானும் ரவுடிதான் என்ற படத்தில் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட நட்பு காதலாகிய நிலையில், தற்போது இருவரும் திருமணம் செய்துக் கொண்டுள்ளனர். நடிகை நயன்தாரா, திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்துள்ள நயன்தாரா, பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து அட்லி இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்துள்ளார். விரைவில் இந்தப் படம் ரிலீசாக உள்ளது.

அஜித்தை இயக்கும் விக்னேஷ் சிவன்
இயக்குநர் விக்னேஷ் சிவனும் தற்போது நடிகர் அஜித்தின் ஏகே62 படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங்கும் துவங்கவுள்ள நிலையில், படத்தில் அஜித்திற்கு உலக அழகி ஐஸ்வர்யா ஜோடியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்போதும் லைட்டான கதைக்களத்தை கையில் எடுக்கும் விக்னேஷ் சிவன், தற்போது கேங்ஸ்டர் கதைக்களத்தை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடகைத்தாய் மூலம் குழந்தை
இதனிடையே திருமணம் முடிந்து சில மாதங்களிலேயே வாடகைத்தாய் மூலம் இரண்டு குழந்தைகளுக்கு விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா பெற்றோராகியுள்ளனர். இந்த விஷயம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், அவற்றை சிறப்பாக எதிர்கொண்டது இந்த ஜோடி.

குழந்தைகளுடன் பொங்கல் கொண்டாட்டம்
இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி இவர்கள் இருவரும் தங்களது குழந்தைகளுடன் கூடிய வீடியோவை ரசிகர்களுடன் பகிர்ந்துக் கொண்டுள்ளனர். இன்ஸ்டாகிராமில் எப்போது ஆக்டிவாக இருக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவன், இதன் வீடியோவை தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வீடியோ வெளியிட்ட விக்னேஷ் சிவன்
விக்னேஷ் சிவன் தொடர்ந்து நயன்தாராவுடன் தான் இருக்கும் வீடியோக்கள் மற்றும் படங்களின் வீடியோக்கள் புகைப்படங்களை பதிவிட்டு ஏராளமான லைக்ஸ்களை பகிர்ந்துவரும் நிலையில், தற்போது இந்த வீடியோவும் வெளியான ஒரு மணிநேரத்தில் லட்சக்கணக்கான லைக்ஸ்களை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











