இந்த தேதியில் நடக்கிறதா விக்னேஷ் சிவன் -நயன்தாரா திருமணம்? வெளியானது பரபரப்பான தகவல்
திருப்பதி : இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இவர்களது திருமணம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் இவர்களது திருமணம் வரும் ஜூன் 9ம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விக்னேஷ் சிவன் -நயன்தாரா
இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இருவரும் நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோதே இவர்களுக்குள் காதல் தீ பற்றிக் கொண்டது. இருவரும் தொடர்ந்து காதலித்து வருகின்றனர். நயன்தாரா அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

நானும் ரவுடிதான் படம்
நானும் ரவுடிதான் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடித்திருந்தனர். இந்தப் படம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றது. இதையடுத்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி பல படங்களை விநியோகித்து வருகின்றனர்.

காத்து வாக்குல ரெண்டு காதல் படம்
சில தினங்களுக்கு முன்பு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் ரிலீசாகியுள்ளது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். இதில் கண்மணி என்ற கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை நயன்தாரா வெளிப்படுத்தியிருந்தார்.

ரிலீசுக்கு பின்பு திருமணம்
முன்னதாக பேட்டியொன்றில், தானும் நயன்தாராவும் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை ரிலீஸ் செய்த பின்பு திருமணம் செய்துக் கொள்ள திட்டமிட்டதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் ரிலீசாகியுள்ள நிலையில் அவர்களது திருமணம் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

திருப்பதியில் சாமி தரிசனம்
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ரிலீசை தொடர்ந்து கோயில்களில் சாமி தரிசனம் செய்து வந்தனர். திருப்பதிக்கும் அவர்கள் சென்றிருந்தனர். இந்நிலையில் இன்றைய தினம் மீண்டும் திருப்பதிக்கு இருவரும் சென்றுள்ளனர்.

ஜூன் 9ல் திருமணம்?
இதனிடையே வரும் ஜூன் 9ம் தேதி இவர்கள் இருவருக்கும் திருப்பதியில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையொட்டியே இருவரும் கடந்த ஒரே வாரத்தில் இரண்டு முறை திருப்பதி சென்றுள்ளதாகவும் தற்போது தெரியவந்துள்ளது. இன்றைய தினம் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு தங்களது திருமண ஏற்பாடுகளை அவர்கள் பார்வையிட்டதாக கூறப்பட்டுள்ளது.

சிறப்பான ஜோடி
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா கோலிவுட்டின் சிறப்பான ஜோடியாக பார்க்கப்படுகின்றனர். இவர்கள் இருவரது திருமணம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேட்டுவந்த நிலையில், தற்போது இவர்கள் இருவரும் திருமணம் செய்யவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











